Lyrics

Kalaivani nin karunai lyrics tamil | கலைவாணி நின் கருணை பாடல் வரிகள்

Kalaivani nin karunai lyrics tamil

கலைவாணி நின் கருணை என தொடங்கும் சரஸ்வதி தேவியின் பாடல் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது… இந்த சரஸ்வதி பாடல் வரிகள் (Kalaivani nin karunai lyrics tamil) அனைவரும் பாடுவதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு வரிகளும் இருமுறை பதிவிடப்பட்டுள்ளது…. நாம் அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெறுவோம்…. கல்வியில் சிறந்து விளங்குவோம்…

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்

வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே…..

 

சரஸ்வதி தேவி அஷ்டோத்ரம்

சரஸ்வதி தேவி 108 போற்றி

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்

மங்கள ரூபிணி பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    4 weeks ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    4 weeks ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    1 month ago

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 (Guru Peyarchi Palangal 2023-24)… Read More

    1 month ago

    Mesha rasi Guru peyarchi palangal 2023-24 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mesha rasi guru peyarchi palangal 2023-24 குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24 Mesha rasi guru peyarchi palangal 2023-24… Read More

    1 month ago