தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, ராகு கால நேரங்களில் (Rahu kala durga stotram / durga ashtakam) ஸ்ரீ துர்கை அம்மனை வழிபட இந்த வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் (Vazhvu anaval durga song) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…. அம்மனை வழிபட்டு பல நன்மைகளை பெறுங்கள்…. இந்த பாடல் துர்காஷ்டகம் என்றும் வழங்கப்படும்…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்
உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
கன்னி துர்கையே இதய கமல துர்கையே
கருணை துர்கையே வீரக் கனக துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
காவிரிப் பெண்ணே வாழ்க!
ராகு காலத்தில் துர்கை முன் நெய் விளக்கேற்றி பாட வேண்டிய பாடல் இது. இதனால் திருமணத்தடை நீங்குதல், மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை….
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா பாடல் வரிகள்
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 (Guru Peyarchi Palangal 2023-24)… Read More
Leave a Comment