புருஷசூக்தம் (Purusha Suktam) பாடல் வரிகள் மற்றும் பொருள்
‘புருஷா’ என்ற சொல்லுக்கு எல்லாம் வல்ல கடவுள் என்று பொருள். இந்த சூக்தம் இறைவனின் பெருமையைப் போற்றுவதாக உள்ளது. சடங்குகளின் அல்லது விழாக்களின் போது வீடுகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பாடப்படுகிறது. இதை பாராயணம் செய்வது ஒருவரது வாழ்வில் ஆசீர்வாதங்களை வழங்குகிறது. இந்த மந்திரத்தை ரிஷிகள் யாகம் செய்வதற்கு முன் ஜபிக்கிறார்கள், இதனால் யாகத்தின் போது எந்த தடைகளும் இடையூறுகளும் ஏற்படாது….
ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம்
ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .
புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி
முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் .
ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி
இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது .
த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன: ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி
பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார்.
தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர:
அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .
ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .
பிறகு அவர் பூமியைப் படைத்தார் .அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் .
யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோஅஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:
முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர். எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் .
ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும்
இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின . தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள்
தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத: தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்சயே
முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்ஸபசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார்
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே சந்தாக்ம் ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று .
தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய
அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின .
யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே
பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?
அவர் முகம் எதுவாயிற்று ?
கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?
தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ?
ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத
அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .
கைகள் சத்ரியன் ஆயிற்று .
தொடைகள் வைசியன் ஆயிற்று .
அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் .
சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத
மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது .
நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்ததபத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன்
தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன .
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானிக்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே
எல்லா உருவங்களையும் தோற்றுவித்து ,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,
மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான் அறிவேன் .
தாதா புரஸ்தாத்யமுதாஜஹார சக்ர: ப்ரவித்வான் ப்ரதிசச்சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா அயனாய வித்யதே
எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,
அவரை நான் இவ்வாறு அறிவபன், இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .
மோட்சத்திற்கு வேறு வழி இல்லை .
யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன் தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:
தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .
அவை முதன்மையான தர்மகள் ஆயின .
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப் பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் .
அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி தஸ்ய த்வஷ்ட்டா விததத்ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே
தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .
பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் . இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் . பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று .
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய
மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான் அறிவேன் .
அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .
முக்திக்கு வேறு வழி இல்லை .
ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ:
இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள்
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோயோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே
யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,ஹெவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களக்கு முன்பே தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் .
ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன் யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே
பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அடாஹிப் பற்றி பின் வருமாறு கூறினார்கள் .
“யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்
ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம்
நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய லக்ஷ்மி தேவியும் உமது மனைவியர் .
பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .
அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் .
இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண
பரம் பொருளே !
நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .
இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,
இகத்திலும் , பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்
ஓம் தத் சத் !
குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள்
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More
Mahalakshmi 100 Special Information in Tamil மகாலட்சுமி (Mahalakshmi prayer benefits) தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி,… Read More
108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்பன் சரண கோஷம் சபரிமலை செல்லும் ஐயப்பா பக்தர்கள் அனைவரும் அனுதினமும்… Read More
Sashti viratham கந்த சஷ்டி விரதம் 2025 பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம்… Read More
அன்னாபிஷேக பொருள் விளக்கம் மற்றும் பலன்கள் | Annabhishegam benefits ஐப்பசி அன்னாபிஷேகம் :🌼 சாம வேதத்திலே ஒரு… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*… Read More