சரபேஸ்வரர் 108 போற்றி – Sarabeswarar 108 potri சிவபெருமானின் மிக முக்கிய வடிவமெனப் போற்றி வணங்கப்படும் சரபேஸ்வர மூர்த்தியை மனதாரப் பிரார்த்தித்தால், தீயனவற்றை அழித்து நல்லன அனைத்தையும் தந்தருள்வார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. எதிரிகளால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் முதலான துர்குணங்களையும் அழித்தொழிப்பவர் சரபேஸ்வரர். இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் சகல நோய்களையும் தீர்த்து வைப்பார். தடைப்பட்ட காரியங்களும் வெற்றிகளும் இவரைத் தரிசித்து வணங்கினால், விரைவில் ஜெயம் கிடைக்கும் என்பது ஐதீகம்!
சரபேஸ்வரர் 108 போற்றி – ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகள் அழிய இக்காலத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. செய்யும் செயல்களில் வெற்றிபெறவும், பிணிகள் நீங்கவும் சரபேஸ்வரரை வழிபாடு செய்யலாம்.
1. ஒம் அம்ருத அரசே போற்றி
2. ஒம் சங்கரா போற்றி
3. ஓம் அடியார்க்கு அடியவா போற்றி
4. ஓம் அட்சர காரணனே போற்றி
5. ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி
6. ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி
7. ஓம் அமரர் படை தலைவா போற்றி
8. ஓம் அம்பலத்தாடும் அரசே போற்றி
9. ஓம் அருட்பெருஞ்ஜோதி அண்ணலே போற்றி
10. ஓம் அழைத்ததும் வருவோனே போற்றி
11. ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
12. ஓம் ஆட்டிப் படைப்பாய் போற்றி
13. ஓம் ஆதி சிவனே போற்றி
14. ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
15. ஓம் ஆனந்தா போற்றி
16. ஓம் உள்ளத்தில் உறைவாய் போற்றி
17. ஓம் எட்டு திசையும் காப்பாய் போற்றி
18. ஓம் எண்ணியது அருள்வாய் போற்றி
19. ஓம் எல்லாமாய் இருப்பவனே போற்றி
20. ஓம் எல்லையில்லா பொருளே போற்றி
21. ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
22. ஓம் கம்பத்தில் நிற்பவனே போற்றி
23. ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
24. ஓம் கர்ப்பம் காப்பவனே போற்றி
25. ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்தவனே போற்றி
26. ஓம் காத்து கருப்பு அழிப்பாய் போற்றி
27. ஓம் கால பைரவரே போற்றி
28. ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
29. ஓம் காலத்தின் வடிவே போற்றி
30. ஓம் காலனுக்கும் காலா போற்றி
31. ஓம் காற்றாய் வருவாய் போற்றி
32. ஓம் குருவுக்கு உரு தந்த உயர்ந்தவா போற்றி
33. ஓம் கூர்நகம் கொண்டவனே போற்றி
34. ஓம் கைலாசவாசா போற்றி
35. ஓம் கொடுமை தீர்ப்பாய் போற்றி
36. ஓம் கோபக்கனலேபோற்றி
37. ஓம் சத்திய உருவே போற்றி
38. ஓம் சத்திய சாட்சியே போற்றி
39. ஓம் சத்திய துணையே போற்றி
40. ஓம் சர்வ வியாபியே போற்றி
41. ஓம் சாந்தி அருள்பவனே போற்றி
42. ஓம் சித்தர் சிந்தை புகுந்தவனே போற்றி
43. ஓம் சித்தாந்த சித்தனே போற்றி
44. ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி
45. ஓம் சிந்தாமணியின் ஜீவனே போற்றி
46. ஓம் சிவ சூரியா போற்றி
47. ஓம் சிவச்சுடரே போற்றி
48. ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி
49. ஓம் சூலினித்தாயின் சுகத்தோனே போற்றி
50. ஓம் சூன்யம் அழிப்பாய் போற்றி
51. ஓம் திகம்பரா போற்றி
52. ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
53. ஓம் திண்ணவா போற்றி
54. ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
55. ஓம் திருபுவனேசா போற்றி
56. ஓம் திருவருள் தருவாய் போற்றி
57. ஓம் திருவுக்கும் திருவான தெய்வமே போற்றி
58. ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
59. ஓம் தெவிட்டா தேனே போற்றி
60. ஓம் நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி
61. ஓம் நஞ்சை புஞ்சை காப்பாய் போற்றி
62. ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
63. ஓம் நமசிவாய திருவே போற்றி
64. ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி
65. ஓம் நம்பினோர் நலம் அருள்வாய் போற்றி
66. ஓம் நரசிம்மரை குளிரவைத்தவா போற்றி
67. ஓம் நலம் தரும் தெய்வமே போற்றி
68. ஓம் நான்மறை ஆனாய் போற்றி
69. ஓம் நியாயம் தருபவனே போற்றி
70. ஓம் நிரந்தரமானவனே போற்றி
71. ஓம் நோய் தீர்க்கும் நெடியாய் போற்றி
72. ஓம் பக்தர் தன் துயர்நீக்கும் ஒளியே போற்றி
73. ஓம் பயம் தீர்க்கும் பரம்பொருளே போற்றி
74. ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
75. ஓம் பரப்பிரம்மனே போற்றி
76. ஓம் பரமாத்மனே போற்றி
77. ஓம் பிரத்யங்கிரா பிராணநாதா போற்றி
78. ஓம் பிறவிபயம் அறுத்தவனே போற்றி
79. ஓம் புவனம் படைத்தாய் போற்றி
80. ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி!!!
81. ஓம் மகாதேவா போற்றி
82. ஓம் மந்திரத் துதி தேவா போற்றி
83. ஓம் மந்திரம் ஆள்பவனே போற்றி
84. ஓம் மழு தூக்கி சிறந்தாய் போற்றி
85. ஓம் மாமலை சக்தியே போற்றி
86. ஓம் மான் வைத்தாய் போற்றி
87. ஓம் முக்தர்கள் ஜீவனே போற்றி
88. ஓம் முக்திக்கு வழி செய்வாய் போற்றி
89. ஓம் முத்தொழில் தலைவா போற்றி
90. ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
91. ஓம் முற்றும் துறந்தோர்க்கும் அருள்வாய் போற்றி
92. ஓம் மூல குருவே போற்றி
93. ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
94. ஓம் மூவர்க்கு முந்திய முதல்வா போற்றி
95. ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
96. ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி
97. ஓம் ருத்ர அக்னியே போற்றி
98. ஓம் ருத்ரதாண்டவா போற்றி
99. ஓம் லிங்கப்பதியே போற்றி
100. ஓம் வல்லார் வாழ்த்தும் தேவா போற்றி
101. ஓம் வழித்துணையே போற்றி
102. ஓம் விண்ணவா போற்றி
103. ஓம் விளக்கு தீபத்தில் ஒளிர்பவனே போற்றி
104. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி
105. ஓம் வீரபத்திரனே போற்றி
106. ஓம் வெள்ளிக்கு வாழ்வு தந்தாய் போற்றி
107. ஓம் வெற்றியை நாடுவோர் உள்ளமே போற்றி
108. ஓம் வேதம் தொழும் வேங்கையே போற்றி
சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்
வாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள்
சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என் முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்…. விதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும் சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள். வளமாய் வாழுங்கள்.
மகாளய பக்ஷ தர்ப்பண ஸங்கல்பம் செய்யும் முறை 18-09-2024 (ப்ரதமை திதி) புதன் கிழமை ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய… Read More
மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More
முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (18.9.2024… Read More
Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம் பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More
ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More
Leave a Comment