18 சித்தர்களின் பிறப்பும் மறைவும்… 18 Siddhargal Life History
18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர்.
மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுள் பக்தியுடையவர்களாக சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
நீண்ட நாட்கள் வாழவைக்கும் இளமை மூலிகைகளை கண்டறிந்து அவற்றை சாப்பிட்டு நீண்ட ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.
மறைந்து ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும் இன்னும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு சூட்சும ரூபமாக உதவி வருகின்றனர், பல சித்தர்கள். ஞானிகள் சித்தர்கள் எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் பிறந்து எத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை பற்றி பார்ப்போம்.
சித்தர்களின் பிறப்பும் மறைவும்
பதஞ்சலி முனிவர் பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில். 5 யுகம் 7
நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் ராமேஸ்வரம்.
அகத்திய முனிவர் பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில். 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சமாதியடைந்த இடம் திருவனந்தபுரம்.
போகர் பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில். 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். ஆவினன்குடியில் சமாதியடைந்தார்.
கமலமுனி பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில். 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சமாதியடைந்த இடம் திருவாரூர்.
திருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில். 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிதம்பரத்தில் சமாதியடைந்தார்.
குதம்பை சித்தர் பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில். 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். மாயவரத்தில் சமாதியடைந்தார்.
கோரக்கர் பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில். 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பேரூரில் சமாதியடைந்தார்.
தன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில். 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். வைத்தீஸ்வரன்கோவிலில் சமாதியடைந்தார்.
சுந்தரானந்தர் பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில். 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். மதுரையில் சமாதியடைந்தார்.
கொங்கணர் பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பதியில் சமாதியடைந்தார்.
சட்டமுனி பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவரங்கத்தில் சமாதியடைந்தார்.
வான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில். 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.
ராமதேவர் பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில். 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அழகர்மலையில் சமாதியடைந்தார்.
நந்தீசுவரர் பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில். 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். காசியில் சமாதியடைந்தார்.
இடைக்காடர் பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில். 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.
கருவூரார் பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில். 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். கரூரில் சமாதியடைந்தார்.
பாம்பாட்டி சித்தர் பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சங்கரன்கோவிலில் சமாதியடைந்துள்ளார்
சித்தர்கள் வகுத்த 64 கலைகள் பெயர்கள்
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group … Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
View Comments
dhayavu seythu sidhargalai patriya unmai theriyamal pirappu iruppukalai ezhuthathirgal. endha oru manithanum iyarkaiku muranpattu indha ulagil vaazhave mudiyathu.