Siththarkal

பதஞ்சலி சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் ஜீவ சமாதி | Patanjali Siddhar History Tamil

பதஞ்சலி சித்தர் வாழ்க்கை வரலாறு மற்றும் ஜீவ சமாதி | Patanjali Siddhar History Tamil
*******************

பதஞ்சலி சித்தர் பிறந்த மாதம் : பங்குனி
பதஞ்சலி சித்தர் பிறந்த நட்சத்திரம் : மூலம்
பதஞ்சலி சித்தர் வாழ்ந்த காலம் : 5 யுகம் 7 நாட்கள்
பதஞ்சலி சித்தர் குரு : நந்தி
பதஞ்சலி சித்தர் சீடர் : கௌடபாதர்
பதஞ்சலி சித்தர் ஜீவசமாதி அடந்த தலம் : சிதம்பரம்.

 

வரலாறு
***********
இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர். சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரி ஷிக்கும் , மும்மூர்த்திகளின் குழந்தைகளாகிய அனுசுயாதேவிக்கும் மகனாய் பிறந்தவர். ஆதிசேஷன் அவதாரமாக தோன்றியவர். அத லினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுகாற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தன் சீடர்களுக்கு அசரீரி யாகவே உபதேசம் செய்வார்.

ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் ஏற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு நேருக்கு நேராய் உபதேசிக்க என்னினார். கௌடபாதர் என்ற சீடர் மட்டும் , பதஞ்சலி முனிவர் ஏவிய பணிக்காக வெளியே சென்றுவிடுகிறார். பதஞ்சலி முனிவர் தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார். திரையின் பின் அமர்ந்து உபதேசத்தை ஆரம்பித்தார். சீடர்களுகமகு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

பதஞ்சலி முனிவர்களிடமிருந்து வந்த கருத்து மழையில் திக்கு முக்கா டிய சீடர்களுக்கு , இந்த கம்பீரமான குரலுக்குறிய குருநாதரின் திரு முகத்தை திரை நீக்கி பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலால் , திரையை பிடித்திழுக்க…..அடுத்த கனம்…..ஆதிஷேடரின் கடும் விஷக் காற்று தீண்டி , அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாகினர்

முனிவர் பயந்தது நடந்தது. அது சமயம் கௌடபாதர் வருவதை கண்டு முனிவர் உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நண்பர்கள் அனைவ ரும் சாம்பலாகியதை கண்டு கதரினார். பொறுமையை இழந்ததினால் வந்த விணை. ” கௌடபாதர் , நீ மட்டும்தான் என் சீடர் என்பது விதி என்பதால் உனக்கு சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் ” என்றார் பதஞ்சலி முனிவர். அதன்படி கௌடபாதருக்கு அனைத்து வித்தைகளும் கற்றுத் தந்தார் பதஞ்சலி. பின்பு பதஞ்சலி சித்தர் ஆதிசேஷ அவதாரத்தில் ஆனந்த தரிசனம் கண்டு சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி.

பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபரசுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.

பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
5. நன் மக்கட்பேறு உண்டாகும்
6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும்.

18 சித்தர்களின் பிறப்பும் மறைவும்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago