Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal
குரு பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025 (Guru Peyarchi Palangal 2024-25)
மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
சுயமரியாதையின் சொந்தக்காரர்களே…!
புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நீங்கள்.
பரந்து விரிந்த பொது அறிவு உள்ளவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்குள்ளே அமர்ந்து உங்களை பலவிதப் பிரச்சினைகளாலும் கசக்கிப் பிழிந்தெடுத்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை 2-ம் வீட்டில் நுழைக்கிறார். இனி சோர்வு, களைப்பு நீங்கும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். கடன் பிரச்சினையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்…. முழுமையாக படிக்க….
மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
அறந்தாங்கியிலிருந்து 42 கிமீ தொலைவில் உள்ள திருப்புனவாசலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு படிக்க உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.
ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் அமர்ந்து பலவிதங்களிலும் உங்களுக்கு நஷ்டங்களையும், பிரச்சினைகளையும், நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஜென்ம குரு என்பதால் நீங்கள் இனி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.. முழுமையாக படிக்க….
ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 17 கிமீ தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். வீட்டில் நல்லது நடக்கும்.”
மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே…!
மனித நேயத்தின் மறுஉருவ மாய் விளங்குபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணவரவையும், செல்வாக்கையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அள்ளிக் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 12-வது வீட்டில் நுழைக்கிறார். 12-ல் குரு நுழைவதால் பயணங்கள் அதிகமாகும்.. முழுமையாக படிக்க….
மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
சென்னை – பாடி – திருவலிதாயத்தில் உள்ள சிவாலயத்தில் வீராசன கோலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். அதிர்ஷ்டம் பெருகும்.
கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே…!
சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ளவர் நீங்கள்.
எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல விதங்களிலும் அவமானங்களையும், தோல்வியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை லாப வீட்டில் நுழைகிறார். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். முழுமையாக படிக்க….
கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
சென்னை பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும்வழியில் 40 கிமீ தொலைவில் உள்ள இலம்பையங்கோட்டூரில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடங்களை புதுப்பிக்க உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.”
சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!
பாக்ய குரு – சிம்மம்
சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!!
மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து ஓரளவு பணவரவையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார்.
10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தை குறைக்குமே என்றெல்லாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும்.
சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் எனும் ஊரில் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குகள். வாய்ப் பேச முடியாதவர்கள், காது கேளாதவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நடக்கும்.”
கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே…!
மனிதநேயம் மாறாதவர் நீங்கள்.
கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து உங்களுக்கு பணத் தட்டுப்பாட்டையும், பிள்ளைகளால் பிரச்சினைகளையும், குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிய குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 9-ம் வீட்டில் இருக்கிறார். குருபகவான் 9-ம் வீட்டுக்குள் நுழைவதால் உங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யோகங்களும் அடுத்தடுத்து நடக்கும்.
கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள தக்கோலம் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.”
துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பவர்களே…!
மற்றவர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்கள்.
தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர் களே! உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியை தந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 8-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். 8-ல் குரு வந்தால் எல்லாம் தட்டிப் போகுமே, தள்ளிப் போகுமே என்று கவலைப்பட வேண்டாம். குரு 8-ல் அமர்ந்தாலும் முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.. முழுமையாக படிக்க….
துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
தஞ்சாவூர் – திருகருகாவூர் செல்லும் வழியில் உள்ள தென்குடி திட்டை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.”
விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே…!
வாக்கு சாதுர்யம் மிகுந்தவர் நீங்கள்.
சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் பாடாய்படுத்தி, அடிமட்டத்துக்கு தள்ளிய குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 7-ம் வீட்டுக்குள் வந்தமர்கிறார். உங்களுடைய ராசியை பார்க்க இருப்பதால் கவலை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி ரேகைகள் மலரத் தொடங்கும்.. முழுமையாக படிக்க….
விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஏரையூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். வசதிகள் பெருகும்.”
தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே…!
சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 6-ம் வீட்டில் சென்று மறைகிறார். 6-ம் வீடு ஆறாக்கும், கூறாக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். முழுமையாக படிக்க….
தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
தேனி மாவட்டம், குச்சனூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள்பாலிக்கும் ஸ்ரீராஜயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுங்கள். வெற்றிகள் தேடி வரும்.
மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே…!
பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள்.
தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் கஷ்டப்படுத்தினார். நிம்மதியில்லாமலும், தூக்கமில்லா மலும், விரக்தியிலும், வேதனையிலும் நீங்கள் அலைந்தீர்கள். இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும்.. முழுமையாக படிக்க….
மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பட்டமங்கலம் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுங்கள். பழைய கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். நினைத்தது நடக்கும்.
கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே…!
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் காய் நகர்த்தி காரியம் சாதிப்பவர் நீங்கள்.
உள்ளத்தில் அழுதா லும், உதட்டால் சிரிப்ப வர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்கிறார். குரு 4-ம் வீட்டில் அமர்வதால் கடந்த ஓராண்டை விட இனி நல்லது நடக்கும். தயக்கம், தடுமாற்றங்கள் இனி நீங்கும். உங்களுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். இடமாற்றமும் இருக்கும்.. முழுமையாக படிக்க….
கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
சென்னை – திருவொற்றியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவடிவுடையம்மன் ஆலயத்துக்கு முன்பு உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.”
மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே…!
எளிய மக்களை அதிகம் நேசிக்கும் அன்பர் நீங்கள்.
அருகில் இருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும், செல்வ செழிப்பையும் தந்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் மறைகிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் குரு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு தொடரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.. முழுமையாக படிக்க….
மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025
பரிகாரம்
தஞ்சாவூர் – திருகருகாவூர் வழியில் உள்ள தென்குடித் திட்டையில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். அனாதை ஆசிரமங்களுக்கு உதவுங்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்