விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Viruchigam sani peyarchi palangal 2017-20
சிறு கண்ணோட்டம்:
விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சற்று கடினமான காலம் தான். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் நாவை அடக்குவது நல்லது. இல்லையேல் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். நீங்கள் குடும்பத்தில் மிகவும் அனுசரித்து செல்லவேண்டிய காலம் இது. பண தட்டுப்பாடு ஏற்படலாம். தேவை இல்லாத வம்பை நீங்களே விலைகொடுத்து வாங்கிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. என்னடா இது சனி பெயர்ச்சி இப்படி இருக்கிறதே என்று கவலை கொள்ளவேண்டாம். அனைவருக்கும் நீங்கள் நல்லதையே செய்யுங்கள். சனி உங்களுக்கு நல்லதை செய்வார். அனைத்திற்கும் மீறி தெய்வ சக்தி என்று ஒன்று உள்ளது. கடவுளை வணங்குங்கள் அவர் உங்களை காத்தருள்வார். முடிந்தால் திருநள்ளாறு சென்று சனி பகவானை தரிசித்து வாருங்கள்.
(விசாகம் 4ம் பாதம், அனுஷம் கேட்டை)
(தோ, ந, நா, நி, நீ, நு, நூ, நே, நோ, ய, யா, யு) போன்ற எழுத்துக்களில் பெயரை முதலாகக் கொண்டவர்களுக்கும் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
வான மண்டலத்தில் 8வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான செவ்வாய் பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுவார். இவரை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உடல்பலமும், உள்ள பலமும் கொண்டவராக திகழ்வீர்கள். தனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்பதில் நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து தனித்தும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் திறம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வசியப்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர்களாகத் திகழ்வீர்கள்.
இத்தகைய வல்லமை உடைய உங்களது ராசியில் இதுவரை ஜென்மச் சனியாக சனிபகவான் சஞ்சரித்து வந்தார். இதுகானும் தேவையற்ற செலவினங்களையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறி – சனி பகவான் சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எந்த வேலையும் முடிக்காமல் தள்ளி போட்ட நிலை மாறும் இதுவரை உங்கள் ராசு ஜென்மராசியாக இருந்தவர் மாறி 2ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், ஓரளவு காப்பாற்றப்படும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனி – குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும். சனிபகவான் 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
உங்களை பற்றிய வீண் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். உங்களை பற்றிய விமர்சனங்களையும் தூக்கு எறிந்து எண்ணிய செயலில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். இதுவரை வராமல் நிலுவையில் இருந்து வந்த பணம், பொருள், நகை, பத்திரங்கள் தாமகவே வந்து சேரும். விடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். காலிமனை, கட்டிய வீடு, வண்டி வாகனங்களால் மற்றும் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் தாமகவே வீடு வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.
பேச்சில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்கள் பேசுவதோ எழுதவோ கூடாது. மற்றவர்கள் விஷயங்களில் அநாவசியமாக தலையிடுதல் கூடாது. கூடியவரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து வருதல் வேண்டும். பணவரவு பொருள் வரவு தாரளமாக இருந்து வரும். தேவையற்ற செலவினங்களும் வரும். கூடிய வரை சுபச் செலவுகள் செய்துவர நன்மை ஏற்படும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. கொடுத்த பணம் வருவதில் சற்று தடை ஏற்பட்டாலும் கண்டிப்பாக தவணை முறையில் வந்து சேரும்.
காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரும் புது வரவால் நன்மையும் தீமையும் கலந்தே காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும்.
பரிகாரம்:சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
நடக்க இயலாத முதியோருக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். திருக்கடையூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதால் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். அருகில் உள்ள அம்மன் கோயிலிற்கு சென்று “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை ஜபித்து அம்மனை வழிபடுங்கள், எதிர்ப்புகள் விலகும்.
பசு வழிபாட்டின் மகத்துவம். பசு வழிபாட்டின் மகத்துவம் - (Benefits of worshipping cow) இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு… Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி 108 murugar names ஓம் அழகா போற்றி ஓம்… Read More
Kandha guru kavasam lyrics கந்த குரு கவசம் பாடல் வரிகள்... Kandha guru kavasam கலியுகத் தெய்வமே கந்தனுக்கு… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More
Leave a Comment