துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Thulam sani peyarchi palangal 2017-20
சிறு கண்ணோட்டம்:
துலாம் ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அதிஷ்டம் தான். உங்களுக்கு ஏழரை சனி முழுவதும் முடியும் காலம் இது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை பாடாய் படுத்தி பலவித பயிற்சிகளை கொடுத்திருப்பார் சனி பகவான். இனி கடந்த ஏழரை வருடங்களில் நீங்கள் பெற்ற அனுபவம் மூலம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி அனைத்தும் நன்மையே. இந்த காலகட்டத்தில் நீங்கள் துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அதனால் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய சொத்து, வீடு வாகனம் என அனைத்தையும் நீங்கள் சேர்க்கும் காலம் இது.
சித்திரை 3, 4,ம் பாதங்கள், சுவாதி, விசாகம்
(ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, நி, து, தே) போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் ஐப்பசி மாதத்தில் பிறன்ந்தவர்களுக்கு இப்பலன் பொருந்தும்)
வான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் – நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற வார்த்தைக்கு சுக்ரன் என்று அர்த்தம் உள்ள சுக்ரன் வீட்டில் பிறந்த நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் செல்லென்னா துயர், வேதனைகளையும், விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். இக்காலங்களில் உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.
புது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.
காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, கிளப், விருந்து, உல்லாசம் நல்ல லாபகரமாகவும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும், உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம் இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும் பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய சமயம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.
பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.
வீட்டருகில் உள்ள பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தை அவ்வப்போது கொடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வாரத்தில் ஒருநாளாவது சென்று வழிபடுங்கள். பிரதோஷ நாளில் சென்றால் மேலும் சிறப்பு. “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை கூறி வாருங்கள் வருமானத்திற்கான தடை நீங்கும்.
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖… Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
Leave a Comment