மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Magara rasi guru peyarchi palangal 2019-20

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

மகர ராசி பலன்கள் – 50/100

மகர ராசிக்கு குருபகவான் 3க்கு அதிபதியாகவும், 12க்கு அதிபதியாகவும் வருவார்.

இதுநாள் வரை ஏழரை சனி நடக்கும் பொழுது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் குரு இருந்தபோது கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல பணவரவை ஓரளவு வழங்கி இருப்பார்.

கோட்சாரத்தில் 12 ராசிகளில் முதன்மையாக நன்மையை பெறும் ராசி, சிம்ம ராசி என குறிப்பிட்டு இருந்தேன்.

அதற்கு எதிர்மறையாக 12 ராசிகளில் மிகவும் எச்சரிக்கையாக கவனமுடன் இருக்க வேண்டிய ராசி மகர ராசி என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஒரு ஜோதிடன் நடுநிலையாளராக செயல்பட வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். கெட்டதையும் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

குரு மகர ராசிக்கு தற்போது 12 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் சுபகாரியங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

அதாவது இதை எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்றால், 100 ரூபாய் சம்பாதிக்றோம். ஹோட்டலில் போய் அந்த நூறு ரூபாய்க்கு வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது பணம் இருக்காது. இருந்தாலும் ஒரு மனதிருப்தி. நாம் சம்பாதித்தோம். நாம் சாப்பிட்டோம் என்று.

அதே 100 ரூபாயை நீங்கள் சம்பாதித்து, தொலைத்து விட்டீர்கள் என்றால் 2 மணி நேரம் எரிச்சல் கொடுக்கும்.

அதே 100 ரூபாயை ஒருவருக்கு கடனாக கொடுத்து, (தானமாக அல்ல) அதை திருப்பித் தராமல், அல்லது தருகிறேன், தருகிறேன் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தால் உங்கள் மன நிலைமை எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள்.

ஆதலால் விரையம் என்று ஆகிவிட்டது. அதை சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

ஏழரைச் சனியில் ஜென்ம சனியும் நடக்க உள்ளதால் மிக மிக மிக என எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்.

புதிய தொழில் முதலீடுகள் தற்போதைக்கு வேண்டவே வேண்டாம்.

வாழ்க்கை வழி தவறும் காலம் என்பதால் மிகவும் விழிப்புடன் இருங்கள்.

கண்டிப்பாக யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். கொடுத்தால் நீங்கள்தான் கட்ட வேண்டும். அது ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பராக இருந்தாலும் பரவாயில்லை.

குரு தற்போது 12-ம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் சுப கடன்களை நம் வருமானத்திற்கு ஏற்ப, விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் அளவோடு வங்கியில் வாங்கிக்கொள்ளுங்கள். அகல கால் வைத்தால் கடனை அடைப்பது சிரமமாகிவிடும்.

4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் நிலை சீராக இருக்கும்.

இந்த நிலைமையும் மாறும் என்பதை போல மாணவர்கள் தங்கள் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும். வேறு எதிலும் மனதைச் செலுத்துவது கூடாது. காதல் கனியாது. கவனமாய் இருங்கள். பெற்றோரின் அறிவுரையை மட்டும் கேட்டு நடங்கள்.

மகர ராசிக்கு அடுத்த சில வருடங்கள் கொஞ்சம் எச்சரிக்கையான காலகட்டமாகவே உள்ளது.

சுய ஜாதகம் வலுத்து இருப்போர் பயப்படத் தேவையில்லை.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல் 10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவரவு உண்டு. 1 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழரைச் சனியுடன் தொடர்வதால் இன்னும் சில காலங்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது.

 

அறிவுரை
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் செலவுகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும், புதிய கடன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், பொருட்கள் களவுபோக வாய்ப்புகள் உருவாகும். ஆடை ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், ஆனைமலை ஸ்ரீ மாசாணியம்மன், புண்ணியநல்லூர் அம்பிகை, சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, மேட்டுப்பாளையம் வன துர்க்கை தரிசனம் உடனுக்குடன் கைகொடுக்கும். ஒவ்வொரு சன்னதியிலும் நெய்தீபம் ஏற்றி வைக்க மறந்து விடாதீர்கள்.
வியாழக்கிழமைதோறும் உங்கள் வீட்டின் பூஜையறையில், மாலையில் 9 நெய் தீபங்கள், மண் அகலில் ஏற்றி வரவும்.அதே அகல்களையே மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தலாம். இதன் சூட்சும சக்தி அளவிடர்கரியது. 6 மாதங்கள் செய்து வந்தால் போதும்.
வியாழக்கிழமைகளில் பகல் உணவு மட்டும் அருந்தி, இரவில் உபவாசம் இருத்தல். அவசியமானால், பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

திருபுவனம் ( கும்பகோணதில் உள்ள  ) சரபரை ஞாயிற்று கிழமையில் ராகு வேளையில் ( 4.30 -6 pm  ) 11 விளக்கேற்றி 11 முறை வலம் வர எப்பேற்பட்ட பிரச்சனைகளும் விலகி  உங்களுக்கு நிம்மதியளிக்கும்.

வியாழக்கிழமையில் தக்ஷ்ணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

 

Leave a Comment