Temples

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் | Kuchanur Saneeswaran Temple

Kuchanur Saneeswaran Temple History, Timings and Special Information

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் – Kuchanur Saneeswaran Temple – ஏழரை ஆண்டு தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கி அருளும் குச்சனூர் சனீஸ்வரன்

நவகிரகங்களில் முக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆண்டு வந்தார் தினகரன் என்ற மன்னர்.

நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது.

திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாதது தான் அது.

ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி ஒன்று கேட்டது.

அதில் ‘உன் வீட்டுக்கு ஒரு சிறுவன் வருவான்.

நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்’ என்று கூறியது.

அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்ன படி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு அரசர் தினகரனி ன் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகா ன ஆண்மகன் பிறந்தான்.

அவன் பெயர் சுதா கன். சுதாகனும் அவருடைய அண்ணனான சந்திரவதனனும் வளர்ந்து வந்த நிலையில் சுதாகனைக் காட்டிலும் வளர்ப்பு மகனான சந்திரவதனன் திறமையாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கினான்.

அதை அறிந்த தந்தை தினகரன் வளர்ப்பு மகனான சந்திரவதனனு க்கு முடிசூட்டி மகிழ்ந்தார்.

சில தினங்களில் தந்தை தினகரனுக்கு விதிப் படி 7 ½ சனி பிடித்து உடல்நிலை மோசமானது.

இந்நிலையைக் கண்ட வளர்ப்பு மகன் சந்திர வதனன் ஜோதிடரிடம் சென்று பரிகாரம் கேட்டான்.

அதற்கு ஜோதிடர், ”சனிபகவானை தரிசித்து வா, உன் தந்தையின் நோய் குண மாகும்” என்று கூறினார்.

உடனே சந்திரவதன ன் தென்னாட்டில் அழகிய பகுதியான மதுரையம்பதிக்கு அருகில் சுரபி நதிக் கரைக்குச் சென்று சனி பகவானின் உரு வத்தைக் கற்பனை செய்து, இரும்பால் சனீஸ் வரனின் உருவத்தைச் செய்தான்.

உருவாக்கிய சனி பகவானைப் பார்த்து ‘கடவு ளே என் தந்தையின் அனைத்து துயரங்களை யும் போக்கி அத்துன்பங்கள் யாவற்றையும் எனக்கு கொடுங்கள். அதை நான் ஏற்றுக்கொ ள்கிறேன்’ என்று வணங்கினான். அவன் குரலில் நெகிழ்ந்த சனி பகவான் அவன் முன் காட்சியளித்தார்.

”நான் உன் தந்தைக்கு கொடுத்த துயரங்கள் யாவும் அவர் முற்பிறவியில் செய்த பாவங்க ளுக்காக மட்டுமே. இப்போது உன் வேண்டு தலை ஏற்று, தந்தையின் துன்பங்கள் யாவற் றையும் போக்கி அந்த துன்பங்களை உனக்குத் தருகிறேன். உன் நல்ல மனதை எண்ணி நீ வெறும் 7 ½ நாழிகை மட்டுமே துன்பத்தை ஏற்றால் போதும். இதுகூட நீ முற்பிறவியில் செய்த பாவத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான்” என சனிபகவான் கூறினார்.

அதன்படியே சந்திரவதனன் சனி பகவானின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தான்.

சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் தோற்று வித்த சனி பகவான் திருவுருவமே குச்சனூர் ஆலய மூலவராக மாறியது. அது இன்றும் வணங்கப்பட்டு வருகிறது. செண்பகநல்லூர் என்று இருந்த ஊரே, சந்திரவதனன் சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்கு குச்சுப்புல்லி னால் கோவில் கட்டியதால் குச்சனூர் என்றா னது.

2000 வருடங்களுக்கு முன் தோன்றிய கோயி ல் என்றாலும் இது சுயம்புவாக தோன்றிய காரணத்தினால் இன்று வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை.

இந்த ஆலயம் சுரபி நதிக்கரையில் அமைந்து ள்ளது. பெரியாறும், சுருளியாறும் இணைந்து உருவானது தான் சுரபி ஆறு. இக்கோயிலில் அரூப வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருவதால் இதைக் கட்டுப்படுத்த மஞ்சள்காப்பு கட்டப்பட்டுள்ளது.

குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினை ப்பவர்கள் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையி லும் இந்த ஆலயம் சென்று வழிபடலாம். சனிக் கிழமைகளில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை கருங்குவளையாலும், வன்னி இலையாலும் அர்ச்சிக்கலாம். அவரின் வாகனமாக உள்ள காகத்தை வணங்கி உண விட்டு வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் பிரசாதம் வைத்து சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெறலாம்..

சனி பகவான் காயத்ரி மந்திரம்

சனிஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

108 சனி பகவான் போற்றி

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago