ஆன்மீக உபதேசம் | Aanmeega upadesam
#அந்திமகாலஉபதேசம்….
*~~~~~~~~~~~~~~~~~~~~~*
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
******************************
⭕ஒவ்வொரு மனிதன் தான் என்ன சம்பாத்தியம் பண்ணி எத்தனை பேரை அடிமையா வெச்சி வேலை வாங்கினாலும் ஊருக்கே ராஜாவா வாழ்ந்தாலும் முதுமைங்கிற ஒருபருவம் மனிதனின் எல்லா சாதனைகளையும் புரட்டி போட்டுடுது.
⭕வயதான காலத்தில் சீக்கிரம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் போய் சேருவது என்பது எப்படி அவர்களின் பிராரப்தமோ அதே போல அவிங்க இருக்கும் காலம் வரை முகம் சுழிக்காமல் பணிவிடை செய்யவதும் அவர்களுடைய உறவினர்களின் பிராரப்தம் ஆகும்.
⭕ஒருவர் கிட்டதட்ட 75 வயது வரை வாழுகிறார் என்றால் கிட்டதட்ட 27375 நாட்கள் மட்டுமே வாழ்கிறார் என்று பொருள்.
⭕அதிலேயும் தூக்கம் 7 மணி நேரமும் காலை கடன்களுக்கு 1 மணி நேரமும் போக கழித்தால் 18250 நாட்கள் தான் வாழ்கை.
⭕ இதிலேயும் குழந்தை பருவம் ஒரு 8 வருடம் கழித்தால் கிட்டதட்ட வெறும் 16000 நாட்களுக்குள்தான் நம்ம வாழ்கையே வரும்.
⭕அதாவது சுய நினைவோடு நான் என்ற நினைப்போடு இருக்கும் நாட்கள் 16ஆயிரத்து சொச்சம்தான்.
🔥இந்த 16000 நாட்களுக்குள் தான் சொந்தம் பந்தம் ,சீர் ,சீமந்தம் ,அங்காளி ,பங்காளி ,கோவில்,திருவிழா, கல்யாணம், காதுகுத்து ,கம்பெனி மற்றும் பல பிரச்சனைகள் எல்லாம்…
🔥ஆனால் இந்த குறுகிய காலத்திற்க்குள் நமக்கு குடுக்கபட்ட தர்மத்தை சிரத்தையோட முடிக்கறது பெரிய விசயம். எல்லாம் முடிஞ்சு போகும் போது அட்லீஸ்ட் குறைஞ்ச பட்ச மன நிம்மதியோட போறாங்களான்னு கேட்டா ஒரே சந்தேகம்தான்..
🍁நாம ஆசைபட்டு வாங்கின கார், நகை, பூமி, வீடு ,சொந்தம் , பந்தம் எல்லாம் இந்த 16000 நாட்களுக்குதான் நமக்கு சொந்தம். அப்பறம் யாருக்கோ?
சரி……
🙏இந்த #குறுகியநாட்களுக்குள்_முடிஞ்சஅளவு #நம்மால்_நல்லகாரியம்_யாராவதுக்கு #பண்ணமுடிஞ்சா_பண்ணனும். #இல்லையாபண்ணறவங்களதொந்தரவு_பண்ணாமல்_இருந்தாலேபோதும்.
🍒வியாசர் 18 புராணங்களையும் எழுதின அப்பறம் ஒட்டுமொத்த புராண சாராம்சமா ஒன்னு சொல்லுவார்
#பரோபகாரபுண்ணியாய_பாபாயபரபீடனம்
🍁அதாவது புண்ணியம் வேணுன்னா பரோபகாரம் பண்ணு இல்லைன்னா பாவம்தான் அப்படிங்கறார்.
🎡இதெல்லாம் தெரியாம அந்திம காலத்தில் ஒரு ஜீவன் போகும் போதாவது நல்ல விசயத்தை கேட்டுட்டாவது போகட்டும்
🍒 அடுத்த ஜென்மாவிலேயாச்சும் அந்த நாமாவை கேட்கற புண்ணியத்தால் நல்ல தர்மம் செய்யட்டும்ன்னு இறக்கும் போது ராம , சிவ மந்திரங்களை காதில் ஓதுவாங்க
காசியில் மரிக்கும் ஜீவன் காதில் ராம நாமாவும் சிவபெருமான் ஓதுவதா ஐதீகம்.
🍒ஆனா நாம என்ன ஜீவன் காதில் சொல்லலாம்?அதே போல மரண காலத்தில் ஜீவன் எதை ஸ்மரிக்க வேண்டும்?அப்படின்னு கேட்டா
🍒இந்த கேள்விய நாரதர் பகவான் நாராயணரிடத்தில் கேட்கிறார். மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் இந்த கேள்வி பதில் வருது.
🍒ஹே பிரபோ! மரிக்கும் போது விஷேசமாய் எதை ஸ்மரிக்க வேண்டும்? ஸனாதனமான தவத்தை சொல்ல வேண்டும் என்கிறார். நாரதர்.
🍒பகவான் நாராயணர் சொல்கிறார். நாரத! #முதலில்ஓங்காரத்தைஉச்சரித்து பிறகு என்னை நமஸ்கரித்து ஒரே மனமுள்ளவனாக பரிசுத்தனுமாக இருந்து கொண்டு
“#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய” எனும் மந்திரத்தை
ஜபிக்க வேண்டும் என்று சொன்னார்.
🌺இப்படியாக, ஒருவர் அந்திம காலத்தில் இருக்கும் போது அவர்களை இந்த மந்திரத்தை சொல்ல செய்யுங்கள்.
🍁நீங்களும் பாராயணம் செய்யுங்கள்.
🍁ஆனால், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது ஆகையால் சிறுவயது முதலே இந்த ஸ்மரணம் இருக்குமாயின் அந்திம காலத்தில் நமக்கு இந்த மந்திரம் நினைவுக்கு வரும்.
⭕ஆனால் நம்ம கதைதான் வேறயாச்சே…. என்னைக்கு சின்ன வயசில் சொல்லிருக்கோம். அதனால்தான் இன்னைக்கு பல பேர் ஆஸ்பிட்டலில் சுய நினைவு கூட வராமல் போய் சேந்துடறாங்க… என்ன பண்ண ? எல்லாம் பகவான் செயல்.
🔥முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்ல சொல்லுங்கள். இந்த மந்திரத்தாலே குழந்தை துருவன் நட்சத்திர பதவி அடைந்தார்… தினமும் 21
முறையாவது குழந்தைகள் சொல்லட்டும்
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
#ஓம்_நமோபகவதே_வாஸுதேவாய
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒