கந்த சஷ்டி விரதம் அன்று மறக்காமல் பாட வேண்டிய முருகர் பாடல்கள்

‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ (Kandha sasti) என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

-என்பது முன்னோர்கள் மொழி. வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு.

இவ்வாறு சிறப்பு மிக்க சஷ்டி விரதத்தில் நாம் மறக்காமல் பாட வேண்டிய முருகர் பாடல்களின் தொகுப்பு இந்த பதிவில் உள்ளது.. அனைவரும் படித்து பயன் பெற்று முருகன் அருள் பெறுவோம்.

 

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

வேல் விருத்தம் பாடல் வரிகள்

ஸ்ரீ சுப்ரமணிய பஞ்சரத்னம் பாடல் வரிகள்

சத்ரு சம்ஹார வேல் பதிகம்

108 வேல் போற்றி

108 முருகர் போற்றி

அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்

கந்தர் அந்தாதி பாடல் வரிகள்

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்

இவை அனைத்தும் நாம் முருகப்பெருமானை போற்றி பாடக் கூடிய பாடல்கள்…  கந்த சஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிப்பட்டால் பல பலன்களை பெறலாம் என்பது சான்றோர்களின் நம்பிக்கை.