Simma rasi guru peyarchi palangal 2022-23
சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2022-23
சவால்களை வென்று… சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே…!!
சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 45/100
நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!
ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்பவர் நீங்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை 8-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். 8-ல் நிற்கும் குருவால் பெயர் கெடுமே, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாதே என்றெல்லாம் வருந்தாதீர்கள்.
2022 குருப்பெயர்ச்சி சிம்மம் ராசிபலன்கள்2022 குருப்பெயர்ச்சி சிம்மம் ராசிபலன்கள்
சர ராசியில் பிறந்த உங்களுக்கு, குருபகவான் உபய வீட்டில் மறைவதாலும் அவர் தன் சொந்த வீட்டில் அமர்வதாலும் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். பாதியிலேயே நின்று போன வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களைச் செய்வீர் கள். இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் சாதக மாகும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் தீரும். மனைவி யின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணம் வந்தாலும் தங்கவில்லையே எனப் புலம்பினீர்களே… இனி ஓரளவு சேமிக்கும் அளவுக்குப் பணம் வரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். பல சிந்தனைகளின் காரணமாக தூக்கமில்லாமல் தவித்தீர்களே… இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.
குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடற்சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மாவுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். அவர் வழிச் சொத்து கைக்கு வரும். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் உற்சாகத் துடன் செயல்படுவார்கள். தலைமையின் ஆதரவு கிடைக்கும்; முன்னேற்றம் உண்டாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திர மான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால், செல்வாக்கு கூடும்; பதவிகள் தேடி வரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய சொந்தங்கள் தேடி வருவர். பூர்வீகச் சொத்தைச் சீர்திருத்தம் செய்வீர்கள். மகனுக்கு வேலை கிடைக் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
30.4.22 முதல் 24.2.23 வரை ரோக சப்தமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி யில் குரு செல்வதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். வேற்று மொழி பேசுவோரால் ஆதாயம் உண்டு.
8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் நம்பிக்கையின்மை, அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்துபோகும். மறதியால் விலையுயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும். சிறு விபத்துகள், வீண் செலவுகள், மறைமுக அவமானம் போன்றவை வந்து சேரும்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்கள் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஒரளவு பணம் வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நிலம், வீடு வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
வியாபாரத்தில்
உங்களின் அணுகுமுறை மாறும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதத்தில் புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகள் லாபம் தரும்.
உத்தியோகத்தில்
சவாலான வேலையையும் எளிதில் முடித்து சாதிப்பீர்கள். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வருங்காலத் திட்டங்களில் சிலவற்றை நிறை வேற்றி வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சித்திரை நட்சத்திர நாளில், காஞ்சி-உத்திரமேரூர் பாதையில் உள்ள திருப்புலிவனம் சென்று, அங்கு அருளும் ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரரையும் ஶ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்; வெற்றி உண்டு.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரரையும், ஸ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.
நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்