Arthamulla Aanmeegam

Homam types benefits | ஹோமங்கள் பற்றிய விளக்கம்

Homam types benefits

தெய்வங்களை திருப்தி செய்வதற்காக நடைபெறும் ஹோமங்கள் (Homam types benefits) மிகுந்த பலனை அளிக்கக் கூடியவை. இது போன்ற வேள்வியல் பலவித சமித்துக்களை வேள்விக் குண்டத்தில் சுடர் விட்டு எரியும் அக்னியில் ஆகுதியாகப் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித பலன்கள் உண்டு.  அவை என்னென்ன பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்ளவோம்.

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?

அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும் ?

முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளெருக்கு: இது நவக்கிரகங்களில் ஒன்றான சூரியனுக்குரிய சமித்தாகும். இது மூலிகை வகையைச் சேர்ந்தது. இந்த சமித்துக்களால் ராஜவசியம், பெண் வசியம் மற்றும் எட்டு வகையான சித்துக்கள் அடையலாம். அத்துடன் செயல் வெற்றி அடையவும் வெள்ளொருக்கை. வேள்வித் தீயில் இடுவார்கள்.

 

செம்மர சமித்து: நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்துக்குரியது. இது ரணநோய்களைத் தீர்க்கும்.

 

நாயுருவி: நவகோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியது. இது இத்த சமித்து சுதர்சன வேள்விக்கு மிகச் சிறந்ததாக பயன்படும். இதன் மூலம் லட்சுமி  கடாட்சம் பெறலாம்.

 

அரசங்குச்சி: ஒன்பது கோள்விகளில் ஒன்றாகத் திகழும் குருவுக்குரிய சமித்து இது பலாஸீ கிடைக்காதபோது இதனைப் பயன்படுத்துவதுண்டு. யுத்தத்தில் வெற்றி, அரச பதவி தலைமைப் பதவி ஆகிய பலன்கள் இதனால் கிட்டும்.

 

அத்தி : நவக்கிரகங்களில் சுக்கிரனை பீரீதி செய்யக்கூடியது அத்தி சமித்து. பில்லி சூன்ய, பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபட, விரோதிகளை நாசம் செய்ய, மேக நோய்களிலிருந்து குணமாக, வாக்கு சித்தியாக, கால்நடை நோய்களை போக்க அத்தி பயன்படும்.

 

வன்னி: கிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சாரம் செய்யும் சமித்தை ஆகுதியில் இடுவதன் மூலம் சகல தோஷ நிவர்த்தி உண்டாகும். வீட்டில்  பாம்பு புற்று, எறும்பு புற்று ஏற்படாது. பூகம்பம் போன்றவைகளால் ஏற்படும் பயம் நீங்கும். வன்னி சமித்தில் அக்னி பகவான் இருப்பதாக புராணவரலாறு  கூறுகிறது.

 

அருகம்புல்: இது நவ கோள்களில் ஒன்றான ராகுகிரக சமித்தாகும். பூர்வ கர்ம வினைகள் இச்சமித்து பயன்படும். கணபதி வேள்வியிலும் இது இடம் பெறும்.

 

தர்ப்பை: நவக்கிரகங்களில் ஞானதாரகரகனான கேது கிரகத்துக்குரியது. இந்த சமித்து ஞானவிருத்தியைத் தரும்.

 

வில்வம்: சிவனைக்குறித்த வேள்விகளிலும், சக்தி சம்பந்தமான வேள்விகளிலும், வில்வ சமித்தைப் பயன்படுத்தினால் அதிகமான பலன்கள் கிடைக்கும். சக்தியும்  செல்வமும் பெற இந்த சமித்து உதவுவதுடன், அரச சம்பத்தும் அளிக்கும்.

ஹோமங்கள் பலவகைப்படுகின்றன.  வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன.

வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார்.

இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன.

ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள்.

இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள்.

இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள்.

இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும்.

அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே.

ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.

அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல்.

ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்…

இந்து தர்ம சாஸ்திரம்

ஆன்மீக வினா விடைகள்

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன?
ஹோமம் தான்.
ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார்.
மந்திரம் சொல்றார்.

என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார்.

நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன?
அது எதற்காக செய்யப்படுகிறது? என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க !!

முதலில்_கணபதி_ஹோமம்.
எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு, கணபதி பூஜை. துர்தேவதைகளாலோ, துஷ்ட்ட சக்திகளாலோ எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வினைகளை வேரறுக்கும் விநாயகர் பூஜை.

#அடுத்து_சங்கல்ப்பம்.
கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதைபோல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும்.
அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை
செய்யப்படுவது.

#அடுத்து_குலதெய்வ_பூஜை.
இது பெரும்பாலான ஹோமங்களில் செய்யப்படுவதில்லை.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.
குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். உலகத்தில் எத்தனை சாமிகள் இருந்தாலும் குலதெய்வம் முக்கியமானது. நம் முன்னோர்கள் காலத்தில் குலதெய்வ பூஜை என்பதை குறையில்லாமல் செய்தார்கள். எந்த காரியமாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வேண்டினார்கள். வருடத்திற்கு ஒரு முறை விழாஎடுத்தார்கள்.
வீட்டில் ஒரு சுபகாரியம் நடந்தாலும் முதல் பத்திரிகை சாமிக்கு வைத்தார்கள். ஆக குலதெய்வத்தோடு அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம். எப்படி இருப்பினும், அடுத்து செய்ய வேண்டியது குலதெய்வ பூஜை. குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் பூஜை. ஆகமத்தில் இடம் இல்லையே என்று அலட்ச்சியம் செய்யக்கூடாது.
#அடுத்து_செய்யப்படுவது
#பிதிர்_பூஜை.
இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது. நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று தலைமுறையை சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி உண்டு. அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம்.
அவர்கள் ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை. எந்த தேவதையை குறித்து ஹோமம் செய்கிறோமோ அந்த தேவதையை கும்பத்தில் நிலைநிறுத்தல்.

கும்ப ஸ்தாபனம்
கும்பம் என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம்.

என்ன ஹோமம் செய்கிறோம்?
அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான் ஆஹாவனம் என்று பெயர். அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம். ஜெனனி ஜென்ம சௌக்கியனாம் வர்த்தினி குல சம்பதாம் பதவிபூர்வ புண்ணியனாம் லிக்கியதே ஜென்மபத்திரிகா நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது
அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள்.நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் ள்கிறோமோ
இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள். இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும். இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு.

இனி_ஹோமம்_ஆரம்பம்
இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள் செய்யப்படுகிறது. வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது என்று பொருள். பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து பாடி, அவர் அருளை பெறுவதுதான். ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு. உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு
சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது. காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது. பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று
பொருள். பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது. வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் சமகம்.

கடைசியாக பூர்ணாஹுதி
இது ஹோமத்தின் நிறைவு பகுதி. பட்டு துணியில் வாசானாதி திரவியங்கள் சேர்த்து, எட்டு கண் விட்டெரிக்கும்அக்னி தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாஹுதி
எனப்படுவது. இந்த அவிர் பாகத்தை பெற்று கொள்ள தேவலோக தேவேந்திரனே வருவாராம்.
இதை செய்து முடித்ததும் ஹோமம் நிறைவு பெறுகிறது.
#சுபம்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Lalitha sahasranamam Lyrics Tamil | ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள்

    Lalitha Sahasranamam Lyrics Tamil இந்த பதிவில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள் (lalitha sahasranamam lyrics tamil)… Read More

    2 days ago

    Sri lalitha pancharatnam lyrics tamil | ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

    ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம்… Read More

    1 week ago

    ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி | kala bhairava jayanti 2023 Date

    ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023) Date ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023)… Read More

    2 weeks ago

    ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார காயத்ரி மந்திரங்கள் | Maha vishnu gayatri mantra in tamil

    ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார (தசாவதாரம்) காயத்ரி மந்திரங்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவின் காயத்ரி மந்திரம் (maha vishnu… Read More

    2 weeks ago

    சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil

    சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil சின்ன சின்ன முருகா… Read More

    2 weeks ago

    வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா | Villali Veeran Ayya Song Lyrics Tamil

    வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran… Read More

    2 weeks ago