மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Meena rasi guru peyarchi palangal 2021-22
மீன ராசி அன்பர்களே, இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 12ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். பொதுவாக குரு 12ல் இருப்பது பணம் பல வகையில் விரயமாகும்.12ல் வரும் குரு வருமானம் இன்றி செலவுகளை அதிகப்படுத்துவார். பல விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பல நன்மைகள் நடக்கலாம். உடல் நலம் நன்றாக இருக்கும். மருத்துவ செலவுக்கு வாய்ப்பில்லை. பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும்.
குரு பகவான் 12ல் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் சீரமைப்பர். வங்கி கடன் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த முடியும். வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிப்பதில் சிரமம் இருக்கும். வாகனம், காப்பிட்டு தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க தவற வேண்டாம். முக்கிய ஆவணங்களை தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். வரவை விட சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். குடும்ப நலன் ஒற்றுமை கூடும். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தேவையான ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.
ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு செல்ல முடியும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டிவரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களை தவிர்க்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடல் நலம் சீராகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு. அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் விரையம் ஏற்படும். பால்ய நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரே நேரத்தில் பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிரிகள் சற்று விலகியே நிற்பர். நீங்களே எதிர்பாராத சாதகமான விஷயம் உங்களுக்கு தேடி வரலாம்.
கூட்டு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் உண்டு. முடங்கிய தொழில்கள் லாபம் தரும். செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இந்த குரு பெயர்ச்சியில் பலன் மிகவும் குறைவாக கிடைப்பதால் பொறுமையை கடைப்பிடிக்கவும். தீமைகளை குறைத்து நண்மைகளை பெற குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும்.
பரிகாரம்: குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்
தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம் கடை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *ஐப்பசி -… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord muruga different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் (Lord Muruga) இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில்… Read More
Leave a Comment