Arthamulla Aanmeegam

Hindu religion question and answers Tamil | ஆன்மீக வினா விடைகள்

Hindu religion question and answers in Tamil

ஆன்மீக வினா விடைகள் (Hindu religion) – இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… நாம் ஒவ்வொருவரும் இதனை தெரிந்து கொள்ளவேண்டும்… அது மட்டுமன்றி, நம் குழந்தைகளுக்கும் இதனை தெரியப்படுத்த வேண்டும்… ஓம் நமஹ சிவாய… இது உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்….

சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்
ருத்ராட்சம்

முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்
சிவன்அருணகிரிநாதர்

சிவனுக்கு “ஆசுதோஷி’ என்ற பெயர் உள்ளது அதன் பொருள்
விரைந்து அருள்புரிபவர்

சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்
லிங்கோத்பவர்

சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்
சோமாஸ்கந்தர்

சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்
திருவண்ணாமலை

கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்
திருமங்கையாழ்வார்

சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு

ருத்ராட்சம்,

நமசிவாய மந்திரம்

தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்
ஐப்பசி பவுர்ணமி

சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்
தட்சிணாமூர்த்தி

ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்
திருக்கடையூர்

ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்
பட்டீஸ்வரம்

ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்
திருமூலர்

முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது
துலாஸ்நானம்

ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது
கடைமுகஸ்நானம்

சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்
கோச்செங்கட்சோழன்

கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்
சிதம்பரம்

வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்
காசி

சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்
திருவண்ணாமலை

அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்
சின்முத்திரை

கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்
சுந்தரர்

வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்
பரணிதீபம் (அணையா தீபம்)

கார்த்திகை நட்சத்திரம் தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்
அனுமன்

நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்
காரைக்காலம்மையார்

“மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்
அப்பர்(திருநாவுக்கரசர்)

நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்
குற்றாலம்

நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்
சங்கார தாண்டவம்

இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

நடராஜருக்குரிய விரத நாட்கள்
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்
களி

திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்
தாயுமானசுவாமி

பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்
காளஹஸ்தி

வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்
பிருங்கி

திருமூலர் எழுதிய திருமந்திரம் திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

விபூதி என்பதன் நேரடியான பொருள்
மேலான செல்வம்

சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்
கஞ்சனூர்

ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

மதுரையில் உள்ள சித்தரின் பெயர்
சுந்தரானந்தர்

திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி
திலகவதி

சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்
சேரமான் பெருமாள் நாயனார்

“அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்
வள்ளலார்

மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை
மங்கையர்க்கரசியார்

மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்
மகேந்திரபல்லவன்

சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம்
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்
நமசிவாய

முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

சிவனுக்குரிய உருவ, அருவ அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்
ராமேஸ்வரம்

சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்
தட்சிணாமூர்த்தி

கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73 குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்
வில்வமரம்

அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி
மானசரோவர்

திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

பதிகம் என்பதன் பொருள்
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்
சிவஞானபோதம்

உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை
டமருகம் அல்லது துடி

அனுபூதி என்பதன் பொருள்
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை
மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்
தடாதகைப் பிராட்டி

பழங்காலத்தில் மதுரை  என்று அழைக்கப்பட்டது
நான்மாடக்கூடல், ஆலவாய்

மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்
கடம்ப மரம்

மீனாட்சி ஆக இருப்பதாக ஐதீகம்
கடம்பவனக் குயில்

மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்
குமரகுருபரர்

மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்
மகாகவி காளிதாசர்

சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்
சித்ராபவுர்ணமி

மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்
ரோஸ் பீட்டர்

காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

“நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்
சூலைநோய்(வயிற்றுவலி)

அம்பிகைக்கு உரிய விரதம்
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்
தோணியப்பர்(சீர்காழி)

தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்
திருநாவுக்கரசர்

“தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்
சுந்தரர்

அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்
திருவானைக்காவல்

தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

சிவசிவ என்றிட தீவினை மாளும்’ என்று கூறியவர்
திருமூலர்

பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்
காஞ்சிபுரம், திருவாரூர்

சிவாயநம என்பதை  பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம் பஞ்சாட்சரம் என்றால் “ஐந்தெழுத்து மந்திரம்’

மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்
பூசலார் நாயனார்

திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்
சேக்கிழார்

சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்
சேந்தனார்

திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்
சண்ட தாண்டவம்

மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்
அகத்தியர்

ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்
தட்சிணாமூர்த்தி

சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்
சேந்தனார்

உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்’ என்று இறைவனைக் குறிப்பிடுபவர்
திருமூலர்

இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்
திருஞானசம்பந்தர்

“நாமார்க்கும் குடியல்லோம்’ என்று கோபம் கொண்டு எழுந்தவர்
திருநாவுக்கரசர்

“ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்’ என்று பாடியவர்
சுந்தரர்

“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர்
மாணிக்கவாசகர்

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்
திருமூலர்

“உழைக்கும் பொழுதும் அன்னையே’ என்று ஓடி வரும் அருளாளர்
அபிராமி பட்டர்

ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்
குலசேகராழ்வார்

திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்
இடைக்காட்டுச்சித்தர்

கோயில் என்பதன் பொருள்
கடவுளின் வீடு, அரண்மனை

நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

சித்தாந்தத்தில் “சஞ்சிதம்’ என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

சிவபெருமானுக்கு பிரியமான வேதம்
சாமவேதம்

நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்
ஆனாய நாயனார்

தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்
திருநாவுக்கரசர்

முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்
திருக்கருக்காவூர்

யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்
திருவையாறு

சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்
ராஜராஜசோழன்

சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்
சோமாஸ்கந்தர்

கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்
விநாயகர் அகவல்

மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்
மூர்த்திநாயனார்

நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்
காளஹஸ்தி

அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்
மதுரை சொக்கநாதர்

தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்
திருச்சி தாயுமானவர்

மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்
திருவண்ணாமலை

காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்
சந்தியா தாண்டவம்

அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்
திருவானைக்காவல்

தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

சிவன் “அம்மா’ என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்
கேதார்நாத்

சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது
பிட்சாடனர்

சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை என்ற பெயரால் அழைப்பர்
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்
ருத்ரபசுபதியார்

இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்
ருத்ரபசுபதியார்

ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை
14

ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்
பதஞ்சலி முனிவர்

சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்
வியாக்ரபாதர், பதஞ்சலி

உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்
சிவபெருமான்

நடராஜரின் தூக்கிய திருவடியை  என்பர்
குஞ்சிதபாதம்

தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்
ரத்தினசபாபதி

உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்
சித்தாந்த அட்டகம்

கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்
கோமுகி

பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

அருணாசலம் என்பதன் பொருள்
அருணம்+ அசலம்- சிவந்த மலை

ஆறாதாரங்களில் திருவண்ணாமலை
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

“கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு
1997, டிசம்பர் 12

அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

 

நான்கு வகை உயிரினங்கள் :

  1. சுவேதஜம் – புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.
  1. உத்பிஜம் – பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.
  1. அண்டஜம் – முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.
  1. ஜராயுதம் – கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :

  1. கர்ணன் (Karnan)
    2. காளந்தி (Kalandhi)
    3. சுக்ரீவன் (Sukriva)
    4. தத்திய மகன் (Son of Thathiya)
    5. சனி (Sani)
    6. நாதன் (Nathan)
    7. மனு (Manu)

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :

  1. சனகர் (Sanagar)
    2. சனாதனர் (Sanadhanar)
    3. சனந்தகர் (Sanandhagar)
    4. சனத்குமாரர் (Sanathkumarar)
    5. வியாக்கிரபாதர் (Viyakkirabhadhar)
    6. பதஞ்சலி (Padhanjali)
    7. சிவயோக முனிவர் (Shivayoga Munivar)
  2. திருமூலர் (Thirumoolar)

அஷ்ட பர்வதங்கள் :

  1. கயிலை (Kailai)
    2. இமயம் (Himalaya)
    3. ஏமகூடம் (Eamakoodam)
    4. கந்தமாதனம் (Kandhamaadhanam)
    5. நீலகிரி (Neelagiri)
    6. நிமிடதம் (Nimidadham)
    7. மந்தரம் (Mantharam)
    8. விந்தியமலை (Vindhaya Mount)

ஆத்ம குணங்கள் :

  1. கருணை (Mercy)
    2. பொறுமை (Patience)
    3. பேராசையின்மை (without Greed)
    4. பொறாமையின்மை (without Jealousy)
    5. நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)
    6. உலோபத்தன்மையின்மை (Ulobathanmaiyinmai)
    7. மனமகிழ்வு (Pleasure)
  2. தூய்மை (Purity)

எண்வகை மங்கலங்கள் :

  1. கண்ணாடி (Mirror)
    2. கொடி (Flag)
    3. சாமரம் (Samaram)
    4. நிறைகுடம் (Full pot)
    5. விளக்கு (Lamp)
    6. முரசு (Drum)
    7. ராஜசின்னம் (The royal symbol)
    8. இணைக்கயல் (

எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள் :

  1. சந்தனம் (Sandal)
    2. கோட்டம்
    3. கஸ்தூரி (Musk)
    4. கற்பூரம் (Camphor)
    5. குங்குமம் (Vermilion)
    6. பச்சிலை
    7. அகில்
    8. விளாமிச்சை வேர் (Rhizome root)

ஏழுவகைப் பிறப்புக்கள் :

  1. தேவர் (Deity)
    2. மனிதர் (Human)
    3. விலங்குகள் (Animals)
    4. பறப்பவை (Birds)
    5. ஊர்பவை
    6. நீர்வாழ்பவை
    7. தாவரம் (Plants)

ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:

  1. பூமி (Earth)
    2. புவர்லோகம்
    3. தபோலோகம்
    4. சத்யலோகம்
    5. ஜனோலோகம்
    6. மஹர்லோகம்
    7. சுவர்க்கலோகம்

ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் :

1.அதலம்
2.கிதலம்
3.சுதலம்
4. இரசாதலம்
5. தவாதலம்
6. மகாதலம்
7.பாதாலம்.

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

அஷ்ட ஐஸ்வர்யங்கள் :

  1. தனம்
    2. தான்யம்
    3. பசு
    4. அரசு
    5. புத்திரர்
    6. தைரியம்
    7. வாகனம்
    8. சுற்றம்

எண்வகை போகங்கள் :

  1. அணிகலன்
    2. தாம்பூலம்
    3. ஆடை
    4. பெண்
    5. பரிமளம்
    6. சங்கீதம்
    7. பூப்படுக்கை
    8. போஜனம் (உணவு)

நவ நாகங்கள் :

  1. ஆதிசேஷன்
    2. கார்க்கோடகன்
    3.அனந்தன்
    4. குளிகன்
    5. தஷன்
    6. சங்கபாலன்
    7. பதுமன்
    8. மகாபதுமன்
    9. வாசுகி

நன்மை தரக்கூடிய தச தானங்கள் :

  1. நெல்
    2. எள்
    3. உப்பு
    4. தீபம்
    5. மணி
    6. வெள்ளி
    7. வஸ்திரம்
    8.சந்தனக்கட்டை
    9. தங்கம்
    10. நீர்ப்பாத்திரம்

நமது சமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .

கற்று தெளிவதோடு நின்றுவிடாமல் கற்றதை, பெற்றதை, தெரிந்ததை நமது குழந்தைகளுக்கு. கற்பிப்போம். இதன் மூலம் நமது தேசம், தெய்வம், த‌ர்மம் காக்கப்படும்.

70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்

இந்து தர்ம சாஸ்திரம்

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More

    1 day ago

    ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

    Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More

    22 hours ago

    Today rasi palan 23/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் செவ்வாய்க் கிழமை சித்திரை – 10

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 10* *ஏப்ரல் -… Read More

    19 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    5 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    5 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago