உமா மகேஸ்வரர் துதி | Uma Maheswara thuthi tamil Meaning – வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற ! மங்களம் பெருக உமா மகேஸ்வரர் துதி!
உமா மகேஸ்வரர் துதி” – ஆதிசங்கரர் !இல்லறம் செழிக்க சிவபார்வதி துதி தமிழில் பதிவு செய்து வணங்குகின்றோம்…
இல்லறம் செழிக்க சிவபார்வதி துதி!
வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற !
கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக் கொடியுடையவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக் கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.
மகிமை மிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்பிரியரைப் போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரை கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.
திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகள் உடுத்தும் சிவைக்கு போற்றி வணக்கம்.
சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.
த்ரிபுராகரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.
பரம ஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங் குழலை உடையவளுக்கு வணக்கம்.
கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி. குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி. வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே! வணக்கம்.
பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப் படுபவளுக்கு நமஸ்காரம்.
அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா/ மகாலட்சுமியால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.
உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.
பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே. வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுத மயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம்.
மணம் கமழும் சந்தன மயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் பெருகிட அருள்வீராக!
மங்களம் பெருக உமா மகேஸ்வரர் துதி!
உமா மகேஸ்வரர் துதி” – ஆதிசங்கரர்
என்றைக்கும் இளமையானவர்களும், உலகங்களுக்கு சர்வ மங்களத்தை அளிப்பவர்களும், பார்வதியை மணக்க வேண்டும் என்று பரமசிவன் தவம் செய்ய, பரமசிவனை மணக்க வேண்டும் என பார்வதி தவம் செய்ய, அதனால் ஒரே சரீரத்தில் இணைபிரியாது இருப்பவர்களும், மலையரசனின் மகளான உமாவுக்கும், காளைக் கொடியுடைய மகேஸ்வரனுக்கும் எனது வணக்கங்கள்.
ஆனந்தத்தைத் தரும் திருவிழாக்களை உடையவர்களும், காதலர்கள்போல எப்போதும் ஒன்றாயிருப்பவர்களும், தம்மை வணங்கும் பக்தர்களுக்கு, விரும்பியதையெல்லாம் அளிப்பவர்களும், மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டு, அர்ச்சனை செய்யப்பட்ட பாதுகையை உடையவர்களுமான உமா மகேஸ்வரர்களான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
காளையை வாகனமாகக் கொண்டவர்களும், தர்மத்தை தாங்கி நிற்பவர்களும், படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, மூவுலகிற்கும் அதிபதியான தேவராஜன் ஆகியோரால் பூஜிக்கப்படுபவர்களும், விபூதி வாசனை சந்தனம் ஆகியவற்றைப் பூசிக்கொண்ட அர்த்தநாரீஸ்வரரான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
உலகத்தை காக்கின்றவர்களும், உலகின் தலைவன் தலைவியும், வெற்றிதரும் மங்களமான் உருவத்தைக் கொண்டவர்களும், ஜம்பாகரனைக் கொன்ற தேவேந்திரன் போன்றவர்களால் கால்களில் விழுந்து வணங்கப் படுபவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
கஷ்டங்களுக்கும் குடும்ப பந்தத்திற்கும் மருந்தாக இருப்பவர்களும், நமசிவாய என்ற மந்திரத்தில் ஆனந்தமாக வசிப்பவர்களும், உலகம் அனைத்தையும் படைத்து, காத்து, தீயதை அழித்து ஆகிய மூன்று தொழில்களையும் புரிபவர்களான சிவ தம்பதிகள் சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
மிகச் சிறந்த அழகுடையவர்களும், இணைபிரியாத மனம் உடையவர்களும், எல்லா உலகங்களுக்கும் நிகரற்ற நன்மை செய்கிறவர்களும், ஆகிய சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
கலிதோஷத்தை நாசம் செய்து காப்பாற்றுகிறவர்களும், உடலில் ஒரு பதியில் அஸ்தியான சாம்பல் ஆபரணமும், மறு பாதியில் மங்கள ஆபரணங்களும் அணிந்தவர்களும், கயிலாயம் என்னும் மலையில் வீற்றிருக்கும் கண்கண்ட தெய்வங்களான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
தீய விஷயங்களையும் பாவத்தையும் முற்றிலும் அழிப்பவர்களும், எல்லா உலகங்களிலும் ஒப்புயர்வில்லாமல் சிறப்பானவர்களும், எங்கும் தடைபடாதவர்களும், நினைத்தபோதெல்லாம் பக்தர்களைக் காக்கின்றவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
தம்பதிகளாக ரதத்தில் செல்பவர்களும், சூரியன், சாந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகப் பெற்றவர்களும், பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும் சந்திரன் போல ஒளிவீசும் தாமரைக்கு ஒப்பான முகமுடையவர்களும் ஆகிய உமா மகேஸ்வரரான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
கூந்தலையும் ஜடாமுடியும் தாங்கியவர்களௌம், பிறப்பு, இறப்பு இல்லாதவர்களும், மகாவிஷ்ணு, தாமரையில் உதித்த பிரம்மா ஆகிய இருவரால் பூஜிக்கப்படுகின்ற சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
மூன்று கண்களையுடையவர்களும் வில்வ மாலையையும், மல்லிகை மாலையையும் தரிப்பவர்களும், அழகிய சுந்தரிகளில் சிறந்தவளான தலைவியும், அடக்கமுள்ளவர்களில் சிறந்தவரான தலைவனும் ஆகிய உமா மகேஸ்வரர் ஆகிய இருவருக்கும் வணக்கம்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பசுக்களான மனிதர்களை காப்பாற்றுகிறவர்களும், பக்தர்களுக்கு ஞானம் அளித்து, முக்தியையும் அளிப்பவர்களும், மூவுலகத்தையும் காப்பதென்று முடிவெடுத்து, அது பற்றியே எப்போதும் யோசிப்பவர்களும், தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுபவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
உமா மகேஸ்வர ஸ்தோத்திரம் பாடல் வரிகள்
Ramakrishnar bird life story பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதைகளில் ஒன்று. கர்ம வினையும் அதைக் கடந்து போகும்… Read More
பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning *புரட்டாசி சிறப்பு பகிர்வு* *கோவிந்தா! கோவிந்தா!!*… Read More
நவராத்திரி 2024 சிறப்பு பதிவு கொலு வைக்க உகந்த நேரம்: 03.10.2024 புரட்டாசி 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *புரட்டாசி -… Read More
கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga mantram lyrics tamil மஹா பாரதத்தில் வன பர்வத்தில்… Read More
Athma and Anathma ஆத்மா, அனாத்மா, பரமாத்மா பற்றிய அழகிய விளக்கம் - Athma and Anathma ஆத்மா, அனாத்மா,… Read More
Leave a Comment