திருவக்கரை வக்கிரகாளியம்மன் கவசம் (Vakrakaliamman kavasam) தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும் அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு உகந்த கவசத்தை துன்பங்கள் நீங்க துதிப்போம்
வக்கிரகாளியம்மன் கவசம்
ஓம் திருவக்கரை வாழும் செல்வியே போற்றி
ஓம் வக்கிரகாளி அம்மையே போற்றி
ஓம் நற்பவி மந்திர நாயகியே போற்றி
ஓம் திருவேற்காடுதுறை காளி மாரி தாயே போற்றி
ஓம் மாங்காட்டில் வாழும் காமாட்சி யன்னையே போன்றி
ஓம் மூன்றாம் கட்டளையமர்ந்த மூகாம்பிகை தாயே போற்றி
ஓம் பெரிய கருப்பூரில் ஆளும் சாமுண்டிக் காளியே போற்றி
ஓம் நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணுடைய நாயகியே போற்றி
ஓம் ராகுகால பூஜை ஏற்கும் துர்க்கையே போற்றி
போற்றி போற்றி ஜெகத்ரஷியே போற்றி
போற்றி போற்றி மகிஷாசுர மர்த்தினியே போற்றி
போற்றி போற்றி நற்பவி மந்திர நாயகியே போற்றி
போற்றி போற்றி வக்ர பத்ரகாளியே போற்றி
சிம்ம வாகினியே சிரசைக் காக்க
நெடுமால் சோதரி நெற்றியைக் காக்க
கஜமுகன் தாயே கண்களைக் காக்க
காளி மாதாவே காதினைக் காக்க
கால ராத்ரீயே கரங்களைக் காக்க
மகேஸ்வரியே மார்பினைக் காக்க
ஈசுவரித் தாயே இதயத்தைக் காக்க
வஜ்ரேஸ்வரியே வயிற்றினைக் காக்க
முண்டமாலினியே முதுகைக் காக்க
கோரரூபினியே குதத்தைக் காக்க
துர்க்கா தேவியே தொடையினைக் காக்க
கால கண்டிகையே காலினைக் காக்க
காக்க காக்க காளியே வருவாய்
கண்ணில் ஒளியைக் கண்ணமை தருவாள்
நாவல் நிறத்தை நாரணி தருவாள்
வாக்கினில் உண்மையை வக்கிரகாளி தருவாள்
மனதில் திடத்தை மாகேந்தரி தருவாள்.
காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 108 போற்றி
அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More
பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More
மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More
மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More
தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More