108 sevvai potri in tamil
செவ்வாய் பகவான் (108 sevvai potri) என்றும் அங்காரகன் என்றும் அறியப்படுகின்ற அருள்மிகு செவ்வாய் பகவான் பற்றிய நவக்கிரக பாடல் வரிகள், செவ்வாய் துதிகள் பதிவு செய்துள்ளோம்
வைத்தீஸ்வரன்கோயில் . செவ்வாய் பகவான் அங்காரகன் திருவடிகளே சரணம்
செவ்வாய் பகவான் 108 போற்றி தமிழ் வரிகள்
செவ்வாய் பகவான் 108 போற்றி
ஓம் அங்காரகனே போற்றி!
ஓம் அன்ன வாகனனே போற்றி!
ஓம் அலங்காரனே போற்றி!
ஓம் அருளும் நாதனே போற்றி!
ஓம் அபய கரத்தானே போற்றி!
ஓம் அவிட்ட நாதனே போற்றி!
ஓம் அல்லல் நாதனே போற்றி!
ஓம் அண்டினார் காவலனே போற்றி!
ஓம் ஆண் கிரகமே போற்றி!
ஓம் ஆடு வாகனனே போற்றி!
ஓம் ஆற்றல் மிக்கவனே போற்றி!
ஓம் ஆணவம் அழிப்பவனே போற்றி!
ஓம் எண்பரித் தேரனே போற்றி!
ஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றி!
ஓம் கதாயுதனே போற்றி!
ஓம் கருங்காலி சமித்தனே போற்றி!
ஓம் கதி அருள்பவளனே போற்றி!
ஓம் கமண்டலதாரியே போற்றி!
ஓம் குஜனே போற்றி!
ஓம் குருவின் நண்பனே போற்றி!
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி!
ஓம் குற்றம் பொறுப்பவனே போற்றி!
ஓம் சங்குக் கழுத்தனே போற்றி!
ஓம் சசி மித்ரனே போற்றி!
ஓம் சகோதர காரகனே போற்றி!
ஓம் சக்தி ஆயுதனே போற்றி!
ஓம் சாமகானப் பிரியனே போற்றி!
ஓம் சித்திரை அதிபதியே போற்றி!
ஓம் சிகப்புக் குடையனே போற்றி!
ஓம் சூரனே போற்றி!
ஓம் சூலாயுதனே போற்றி!
ஓம் செம்மீனே போற்றி!
ஓம் செந்நீர் முத்தனே போற்றி!
ஓம் செங்கண்ணனே போற்றி!
ஓம் செவ்வாடையனே போற்றி!
ஓம் செண்பகப் பிரியனே போற்றி!
ஓம் செம்மேனியனே போற்றி!
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி!
ஓம் செம்பு உலோகனே போற்றி!
ஓம் செம்மாலை அணிபவனே போற்றி!
ஓம் செவ்வாய் நாதனே போற்றி!
ஓம் தனிச் சன்னதியுளானே போற்றி!
ஓம் தவத்தால் உயர்ந்தவனே போற்றி!
ஓம் தண்டாயுதனே போற்றி!
ஓம் தனமளிப்பவனே போற்றி!
ஓம் திருக்கோலனே போற்றி!
ஓம் திருச்சிறுகுடி அருள்பவனே போற்றி!
ஓம் தீரனே போற்றி!
ஓம் தீன ரட்சகனே போற்றி!
ஓம் துயர் துடைப்பவனே போற்றி!
ஓம் துஷ்டரை அழிப்பவனே போற்றி!
ஓம் துவரை விரும்பியே போற்றி!
ஓம் துவர்ப்பு சுவையனே போற்றி!
ஓம் தென் திசையானே போற்றி!
ஓம் தெற்கு நோக்கனே போற்றி!
ஓம் தெய்வத் தேரனே போற்றி!
ஓம் தைரியம் அளிப்பவனே போற்றி!
ஓம் நிலமகள் சேயே போற்றி!
ஓம் நிலம் ஆள்பவனே போற்றி!
ஓம் நாற்கரனே போற்றி!
ஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றி!
ஓம் பராக்கிரமனே போற்றி!
ஓம் பகையழிப்பவனே போற்றி!
ஓம் பலம் அளிப்பவனே போற்றி!
ஓம் பவளப் பிரியனே போற்றி!
ஓம் பழநியில் அருள்பவனே போற்றி!
ஓம் பரத்வாஜர் சீடனே போற்றி!
ஓம் பரனருள் பெற்றவனே போற்றி!
ஓம் பார்க்கவனே போற்றி!
ஓம் பவுமனே போற்றி!
ஓம் பிருத்வி பாலனே போற்றி!
ஓம் பின்னும் செல்வோனே போற்றி!
ஓம் பூமி அதிதேவதையனே போற்றி!
ஓம் புரூரவசுக்கு அருளியனே போற்றி!
ஓம் புள்ளிருக்கு வேளூரானே போற்றி!
ஓம் பொன் தேரனே போற்றி!
ஓம் மங்களனே போற்றி!
ஓம் மங்கலம் அளிப்பவனே போற்றி!
ஓம் மருந்தாவோனே போற்றி!
ஓம் மகரத்தில் உச்சனே போற்றி!
ஓம் மாவீரனே போற்றி!
ஓம் மிருகசீரிட நாதனே போற்றி!
ஓம் முக்கோண மண்டலனே போற்றி!
ஓம் முருகனருள் பெற்றவனே போற்றி!
ஓம் முடி தரித்தவனே போற்றி!
ஓம் மூன்றாமவனே போற்றி!
ஓம் மென்னகையனே போற்றி!
ஓம் மேன்மையளிப்பவனே போற்றி!
ஓம் மேதையே போற்றி!
ஓம் மேலோனவனே போற்றி!
ஓம் மேஷக் கோடியோனே போற்றி!
ஓம் மேஷராசி அதிபதியே போற்றி!
ஓம் ரவி மித்ரனே போற்றி!
ஓம் ரோக நாசகனே போற்றி!
ஓம் வரத ஹஸ்தனே போற்றி!
ஓம் வரம் அருள்பவனே போற்றி!
ஓம் வியர்வை தோன்றலே போற்றி!
ஓம் விருச்சிக ராசி அதிபதியே போற்றி
செவ்வாய் காயத்ரி மந்திரம்:
‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’
பொருள்: வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானே, வாழ்வில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வல்லமை கொண்டவரே இந்த அடியேனுக்கு நல்லாசி வழங்க வேண்டி உங்களை வணங்குகிறேன்
தினமும் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக உடல் பிணி நீங்கும், உடல் உறுதிபெறும், மனதில் தைரியம் பிறக்கும், உள்ளம் தூய்மை அடையும், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜபிக்கலாம்.
செவ்வாய் பகவான் பரிகாரங்கள்:
செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று, சிவபெருமான், பார்வதிக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு.மேற்கூறிய பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுற்க்கு அருகிலேயே இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செவ்வாய் கிழமைகளில் காலை 9 லிருந்து 10 மணிக்குள்ளாக சென்று, செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சாற்றி, சிறிது துவரம் பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 வரை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் இருக்கும், பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, முருக மந்திரங்களை 108 எண்ணிக்கை வரை துதிப்பதால் செவ்வாய் பகவானின் அருள் கிட்டும். உங்களின் இடது கையில் தரமான செம்பு வளையம் ஒன்றை செவ்வாய்க்கிழமையில் அணிந்து கொள்ள வேண்டும். கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறும் காலத்தில் கோயில் பூஜைகளுக்கு செந்நிற மலர்கள் மற்றும் துவரம் பருப்புகளை தானமாக தரலாம். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் போன்றோர்களின் நலன்களுக்கான விடயங்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப நிதி அளிப்பது செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும் சிறந்த பரிகாரமாக காரணமாக இருக்கிறது.
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
செவ்வாய் பகவான் மந்திரம் மற்றும் துதிகள்
அங்காரகன்
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ: பௌம: ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே ச’க்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ: பௌம: ப்ரசோதயாத்
98 போற்றிகள் தான் இருக்கு