Rahu 108 potri in tamil | 108 Rahu Potri Lyrics Tamil | ராகு 108 போற்றி
ஓம் அமிர்தம் அருந்திய அரவே போற்றி
ஓம் அரக்கன் தலை கொண்டாய் போற்றி
ஓம் அரச பதம் அருள்வாய் போற்றி
ஓம் அருகம் புல்லை உவப்பாய் போற்றி
ஓம் அறிதற் கரிய பொருளே போற்றி
ஓம் அன்பரைக் காக்கும் அருளே போற்றி
ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் இடப ராசியில் இனிப்பாய் போற்றி
ஓம் இராகுவே போற்றி
ஓம் இராகு காலம் நின்றாய் போற்றி
ஓம் ஈசன் அடியார்க்கு இனியாய் போற்றி
ஓம் உதவும் உள்ளம் கொண்டாய் போற்றி
ஓம் உளுந்து சோறு உகந்தாய் போற்றி
ஓம் எதிர்பாராச் செல்வம் ஈவாய் போற்றி
ஓம் ஏற்றம் அளித்து மகிழ்வாய் போற்றி
ஓம் கங்கை நீராடல் உகப்பாய் போற்றி
ஓம் கேடயம் உடையாய் போற்றி
ஓம் கதிரோன் வழியை மேவுவாய் போற்றி
ஓம் கடகம் உகந்த கனலே போற்றி
ஓம் கடுகுத் தூபம் களிப்பாய் போற்றி
ஓம் கருமையின் உருவே போற்றி
ஓம் கரிய ஆடை உகந்தாய் போற்றி
ஓம் கரிய பாம்பின் தலையில் போற்றி
ஓம் கருங்கல் தன்னில் களிப்பாய் போற்றி
ஓம் கருணை உடையாய் போற்றி
ஓம் கருநிறக் கொடி உடையாய் போற்றி
ஓம் கலையின் வடிவே போற்றி
ஓம் கவந்த உருவினாய் போற்றி
ஓம் கன்னி ராசியில் களிப்பாய் போற்றி
ஓம் காசிபன் மகனே போற்றி
ஓம் காமதேனுவாய் வழங்குவாய் போற்றி
ஓம் காளத்தி உகந்த கடவுளே போற்றி
ஓம் கேதுவின் துணைவா போற்றி
ஓம் கைப்பு உணவில் களிப்பாய் போற்றி
ஓம் கொற்றவை ஆணை முடிப்பாய் போற்றி
ஓம் கோணத்தில் நின்று கொடுப்பாய் போற்றி
ஓம் கோமேதகம் அணிவாய் போற்றி
ஓம் கோளின் கொடுமை தவிர்ப்பாய் போற்றி
ஓம் சந்திரன் பகையே போற்றி
ஓம் சனியின் நண்பனே போற்றி
ஓம் சனிபோல் பலனைத் தருவாய் போற்றி
ஓம் சனி போல் முதன்மை உறுவோய் போற்றி
ஓம் சிம்மிகைச் செல்வா போற்றி
ஓம் சிவநேசனே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலப் படையாய் போற்றி
ஓம் செல்வம் அளிப்பாய் போற்றி
ஓம் தன்வசம் ஆக்கும் தன்மையோய் போற்றி
ஓம் தானவா போற்றி
ஓம் திசைஎலாம் ஆள்வாய் போற்றி
ஓம் தீநெறி மாற்றுவாய் போற்றி
ஓம் தீம்பால் ஆட்டு உகந்தாய் போற்றி
ஓம் தீமை தவிர்ப்பாய் போற்றி
ஓம் துன்பம் துடைப்பாய் போற்றி
ஓம் தூயவர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் தெய்வ நலம் பெற்ற தீரா போற்றி
ஓம் தென்மேற்குத் திசை நோக்கி நின்றாய் போற்றி
ஓம் தேறற் கரியாய் போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தொன்மை நிழலோய் போற்றி
ஓம் நாக உடல் கொண்டாய் போற்றி
ஓம் நாகேஷ் சுரத்து நம்பா போற்றி
ஓம் நிழலாய் இருந்து நிகழ்த்துவாய் போற்றி
ஓம் நினைத்த தெல்லாம் கொடுப்பாய் போற்றி
ஓம் பகைத்தோரை அழிப்பாய் போற்றி
ஓம் பணிந்தார் பாவம் துடைப்பாய் போற்றி
ஓம் பதினாறு பொருளும் படைப்பாய் போற்றி
ஓம் பதினெண் திங்கள் தங்குவாய் போற்றி
ஓம் பாதி உடம்பின் பகவ போற்றி
ஓம் பாம்பின் தலைவனே போற்றி
ஓம் பார்வையில் நன்மை படைப்போய் போற்றி
ஓம் பித்த நாடியில் பேசுவாய் போற்றி
ஓம் பிள்ளைப்பேறு அளிப்பாய் போற்றி
ஓம் பிறப்பைத் தருபவனே போற்றி
ஓம் பிறர்வயம் ஆகும் பெரியோய் போற்றி
ஓம் பீடுடைக் கோளே போற்றி
ஓம் புளிப்புச் சுவையில் களிப்பாய் போற்றி
ஓம் பெருநலம் அருள்வாய் போற்றி
ஓம் பேருடல் உடையவனே போற்றி
ஓம் பைய நடக்கும் பரம போற்றி
ஓம் போட்டியில் வெற்றி புணர்ப்போய் போற்றி
ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மகர வீட்டில் மகிழ்வாய் போற்றி
ஓம் மாற்றுப்போக்கு உடையாய் போற்றி
ஓம் முதலில் புகழைத் தருவாய் போற்றி
ஓம் முடிசூடி மகிழ்வாய் போற்றி
ஓம் முடியாத எல்லாம் முடிப்பாய் போற்றி
ஓம் முனை முகத்தினாய் போற்றி
ஓம் முனை முகத்து வெற்றி தருவாய் போற்றி
ஓம் மேடராசியில் பிறந்தாய் போற்றி
ஓம் வணங்கத் தக்கவா போற்றி
ஓம் வரம்பல தருவாய் போற்றி
ஓம் வரம்தரு கையாய் போற்றி
ஓம் வலிய அங்கத்தினாய் போற்றி
ஓம் வலிமை உடையவா போற்றி
ஓம் வானோர் குழுவில் வைகுவாய் போற்றி
ஓம் விடத்தி முகத்தினாய் போற்றி
ஓம் விரிகதிர் விழுங்குவாய் போற்றி
ஓம் வீட்டில் வளமை வழங்குவாய் போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் வீறுடையோனே போற்றி
ஓம் வீரம் விவேகம் உடையாய் போற்றி
ஓம் வெற்றி உடையாய் போற்றி
ஓம் வெற்றி தருவாய் போற்றி
ஓம் வேண்டுவ அருள்வாய் போற்றி
ஓம் வேதம் அறிந்தவா போற்றி
ஓம் வேதநாயகர் அருள் பெற்றாய் போற்றி
ஓம் வேதம் உணர்ந்த தேவே போற்றி போற்றி….
ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
பொருள்: நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.
ராகு போற்றி பாடல்
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்