Samayapurathale mariamma song lyrics in Tamil
சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா)
துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா)
எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
கத்தி கதறுகிறோம் கேட்கலையோ – தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ (சமயபுரத்தாளே மாரியம்மா)
உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே – எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
காலிற் சலங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
பூவாடை வீசுதம்மா பூமகளே
உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா)
நிறைஞ்ச மனசு உனக்கு தாண்டி பாடல் வரிகள்