Rishaba Rasi Guru Peyarchi Palangal 2020-21
ரிஷப ராசி பலன்கள் – 90/100 – ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal 2020-21
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்கிற பண்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே !!
நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் ரிஷப ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கின்ற குருவானவர் தன்னுடைய 5ஆம் பார்வையாக ராசியையும், ஏழாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
மனதில் புதுவிதமான உத்வேகம் பிறக்கும். உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றி பெற உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக புதிய நபர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்துவந்த தடைகளும், தாமதங்களும் அகலும். தீராத பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களை தனது விருப்பம்போல் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சிந்தனைகள் மற்றும் மாற்றமான அணுகுமுறைகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பொருள் வரவும் மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில்கள் தொடங்குவதற்கான முயற்சிகள் மேம்படும். பணி நிமிர்த்தமான வேலைகளை உடனடியாக செய்து முடித்து பாராட்டுகளை பெற்று மகிழ்வீர்கள்.
விவசாயிகளுக்கு :
பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமான பேச்சுக்களின் மூலம் முடிவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த வழக்குகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு உண்டாகும். மேய்ச்சல் நிலத்தின் மூலம் பணவரவுகள் மேம்படும். விளைச்சல் எதிர்பார்த்த அளவில் இருப்பதினால் லாபம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு :
திருமணமான தம்பதியர்களுக்கு புத்திர பாக்கியம் விரைவில் கைகூடும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அனுபவிக்க இயலும். இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பயணத்தின்போது போதிய ஆவணங்களை எடுத்து செல்லவும்.
வியாபாரிகளுக்கு :
சிறு, குறு தொழில் மேற்கொள்பவர்களுக்கு லாபம் மேம்படும். வீடு, மனை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு லாபங்கள் மேம்படும். நகை, ஆபரணம் தொடர்பான வியாபாரிகளுக்கு லாபங்கள் காலதாமதமாக கிடைக்கும். சிலருக்கு உயில் வழியான சொத்துக்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
அரசியல்துறையினருக்கு :
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்களின் மறைமுகமான ஆதரவு மனநிம்மதியை ஏற்படுத்தும்.
கலைஞர்களுக்கு :
எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கலை ரசனையை எடுத்துரைக்கும்போது அதில் புதிய முயற்சியால் மாற்றத்தை உருவாக்கி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த பல திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வசதி- வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.
பாக்ய குரு ரிஷபம் ராசிக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார்.9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். குரு உங்க ராசிக்கு 8,11க்குடையர். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை மல்லிகை மலர்கள் சாற்றி வணங்கி வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், காரிய சித்தியும், பூர்வீக மேன்மையும் உண்டாகும்.
சென்னை – திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் கொண்டைக் கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் தடைகள் நீங்கும்; வெற்றி கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்