Lyrics

Thirupalliyezhuchi Lyrics in Tamil | திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் – மாணிக்கவாசகர்

Thirupalliyezhuchi Lyrics in Tamil

திருப்பள்ளியெழுச்சி  பாடல் வரிகள் (Thirupalliyezhuchi Lyrics) மாணிக்கவாசக சுவாமிகள் (இன்றைய ஆவுடையார் கோவில்) திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் : 01

போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 02

அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 03

கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 04

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 05

“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 06

பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 07

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 08

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 09

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 10

“புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று” நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

திருச்சிற்றம்பலம்

திருவெம்பாவை பாடல் வரிகள்

திருவாசகம் பாடல் வரிகள்

திருச்சாழல் உருவான கதை

ஆன்மீக வினா விடைகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram prayers for getting baby

    Aadi pooram Prayers for getting baby பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்! ஆடி பூரம் 2024 தேதி… Read More

    1 week ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2024 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    1 week ago

    ஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai

    Aadi kiruthigai #ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!! - ஆடி கிருத்திகை 2024 தேதி மற்றும் நேரம்: ஆடி… Read More

    1 week ago

    ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai special

    Aadi Amavasai special ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் Aadi amavasai ********************************************** ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள்… Read More

    1 week ago

    ஆடிப்பெருக்கு விழா | aadi perukku festival | aadi 18

    ஆடிப்பெருக்கு:  3/8/2024 aadi perukku தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் ஒவ்வொரு… Read More

    1 week ago

    Aadi month special Festivals Information | ஆடி மாத சிறப்புகள்

    Aadi month special Festival News and Info ஆடி மாத சிறப்புகள் Aadi month special news -… Read More

    1 week ago