வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள்

வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran Ayya Song Lyrics Tamil) சாமி ரொம்ப சிறுசா ஐயா lyrics இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் ஐயப்ப சாமியை வழிபட நாம் பாட வேண்டிய ஒன்றாகும்… ஐயப்ப சாமி பூஜையிலும் இந்த பாடல் தற்போது மிக பிரபலமாகி உள்ளது… ஆதலால் இந்த வில்லாளி வீரன் ஐயா, வீர மணிகண்டனையா பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த பாடலின் காணொளியும் இறுதியில் உள்ளது… சாமியே சரணம் அய்யப்பா…

எத்தனையோ மலைகள் உண்டு
ஆமாம்….
எங்கெங்கோ கோவில்கள் சென்றதுண்டு
ஆமாம்…
ஆனால் உன்னை போல்
ஒரு தெய்வத்தை உலகில் நான்
கண்டதில்லையே ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா

வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா

சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

மோகினி பாலன் என்போம்
ஆமாம்…
மோகன ரூபன் என்போம்
ஆமாம்…
வில்லாளி வீரன் என்போம்
ஆமாம்…
வீர மணிகண்டன் என்போம்
ஆமாம்…
பந்தள ராஜன் என்போம்
ஆமாம்…
பம்பா வாசன் என்போம்
ஆமாம்…

கலியுக வரதன் என்போம்
ஆமாம்…
சாந்தமலை வாசன் என்போம்
ஆமாம்…
சத்குரு நாதன் என்போம்
ஆமாம்…
சாந்தஷரூபன் என்போம்
ஆமாம்…
ஆனந்த சித்தன் என்போம்
ஆமாம்…
ஹரிஹர சுதன் என்போம்
ஆமாம்…

ஈசனுக்கு மகனாம்
ஈடில்லா தெய்வமாம்
குழந்தையாய் இருப்பானாம்
பக்தர் குறையை
எல்லாம் தீர்ப்பானாம்
ஏழைக்கு அருள்பவனாம்
நம்ம குல சாமியாம்

அப்படிப்பட்ட
சுவாமி ரொம்ப சிறுசையா
ஆனா சக்தி ரொம்ப பெருசையா

வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

அச்சங்கோவில் அரசன் என்போம்
ஆமாம்…
ஆரியங்காவு ஐயன் என்போம்
ஆமாம்…
குளத்துப்புழை பாலன் என்போம்
ஆமாம்…
எருமேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா என்போம்
ஆமாம்…
சொரிமுத்து அய்யனார்
அப்பன் என்போம்
ஆமாம்…

ஜோதிஷரூபன் என்போம்
ஆமாம்…
மகர்ஷி மர்த்தன் என்போம்
ஆமாம்…
மணிகண்ட சுவாமி என்போம்
ஆமாம்…
சுகுணவிலாசன் என்போம்
ஆமாம்…
சுந்தர ரூபன் என்போம்
ஆமாம்…

ஜாதி மத பேதமில்லா கடவுளாம்
சக்திய வடிவான தெய்வமாம்
ஆபத்தில் காப்பவனாம்
அன்னதான பிரபுவாம்
உலகத்தின் ஒப்பற்ற தெய்வமாம்
சோதனைகள் செய்வானாம்
ஆனால் கைவிட மாட்டானாம்

அப்படிப்பட்ட
சுவாமி ரொம்ப சிறுசையா
ஆனா சக்தி ரொம்ப பெருசையா

வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

பூலோகநாதன் என்போம்
ஆமாம்…
பூமி பிரபஞ்சன் என்போம்
ஆமாம்…
ராஜாதி ராஜன் என்போம்
ஆமாம்…
ராஜ மணிகண்ட
சுவாமி என்போம்
ஆமாம்…
ஸ்ரீ தர்ம சாஸ்தா
தெய்வம் என்போம்
ஆமாம்…

தருணி தரகண்டன் என்போம்
ஆமாம்…
பொன்னம்பல வாசன் என்போம்
ஆமாம்…
தேவாதி தேவன் என்போம்
ஆமாம்…
மங்கள மூர்த்தி என்போம்
ஆமாம்…
மகர ஜோதி என்போம்
ஆமாம்…

சகலகலா வல்லவனாம்
சந்தன பிரியனாம்
நெய் அபிஷேக பிரியனாம்
சபரிமலையில் வாழ்பவனாம்
பக்தர் உயிரில் கலந்தவனாம்
பாசமான சுவாமியாம்

அப்படிப்பட்ட
சுவாமி ரொம்ப சிறுசையா
ஆனா சக்தி மட்டும் பெருசையா

வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

பச்சை புள்ளை பவள புள்ளை
பாண்டுரங்கன் பெத்த புள்ளை
பம்பையிலே பொறந்த புள்ளை
பந்தளத்தில் வளந்த புள்ளை

சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா

சுவாமியே… சரணம் ஐயப்பா

கண்ணுமணி பொன்னுமணி
சபரிமலை முத்துமணி
கழுத்தில் உள்ள துளசி மணி
கண்ணே பொன்னே தங்கமணி

சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா

சுவாமியே… சரணம் ஐயப்பா

ராஜாதி ராஜனையா
ராஜ மணிகண்டனையா
பூலோக நாதனையா
பூமீர்ப்ப அஞ்சனையா

சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமியே… சரணம் ஐயப்பா

சொரிமுத்து ஐயன் அவன்
சொக்க வைக்கும் பிள்ளை அவன்
ஆண்டி முதல் அரசன் வரை
ஆதரிக்கும் சாமி அவன்

சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா

திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமி சாமி திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமியே திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமி சாமி திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமி சாமி திந்தகத்தோம்

திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமியே திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்

சுவாமியே… சரணம் ஐயப்பா…

சாமி சிறுசு சக்தி பெருசு பாடல் வரிகள் காணொளி

 

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

எங்க கருப்பசாமி பாடல் வரிகள்

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்