சென்னையிலிருந்து அயோத்திக்கு கம்மி பட்ஜெட்டில் ட்ரிப் பிளான்

முழு இந்தியாவே, ஏன் உலக நாடுகளும் கூட அயோத்தி ராம் மந்திர் திறப்பு விழாவை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான பொது மக்களின் உற்சாகம் புதிய உச்சத்தை அடைகிறது. பிரமாண்ட பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் ஆசையாக இருக்கும். இப்போது நாம், சென்னையில் இருந்து அயோத்திக்கு கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா பிளான் பண்ணுவது எப்படி என்று பார்ப்போம்

ஸ்ரீ ராமபிரான் பிறந்த இடத்தில் எழுப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ராமர் கோவிலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களும், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் தான் இந்தியாவில் இப்போது ஹாட் டாபிக். இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையிலிருந்து அயோத்திக்கு எப்படி சுற்றுலா செல்வது என்று பார்ப்போம்

அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி வெகு விமர்சியாக திறக்கப்படவுள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வு இந்தியா முழுவதும் பல நகரங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் பக்தர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கௌதம் அதானி, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, சச்சின் டெண்டுல்கர், M.S தோனி போன்ற பல பெரிய தொழிலதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வுக்குப் பிறகு, ஜனவரி 24 முதல் கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்படும்.

சென்னையிலிருந்து அயோத்திக்கு ரயில்கள்:

22613 RMM – AYC எகஸ்பிரஸ்

12522 ராப்திசாகர் எக்ஸ்பிரஸ்

02522 KYQ BNC ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்

02512 KCVL GKP ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்

05304 ERS – GKP ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்

16793 ஷ்ரத்தா எக்ஸ்பிரஸ்

இவற்றில் சில ரயில்கள் அயோத்திக்கும், சில ரயில்கள் அயோத்தியில் இருந்து 28 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மானக்பூருக்கும் செல்லுகின்றன. இதில் ஒரு ஸ்லீப்பர் டிக்கெட் கட்டணம் ரூ.800 இல் இருந்து கிடைக்கின்றன.

 

சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான பயணம்:

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக விமானங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஆனால் சென்னையிலிருந்து லக்னோவிற்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து அயோத்தியை அடையலாம். Go Air, Indigo உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சென்னையிலிருந்து லக்னோவிற்கு விமான சேவை வழங்குகின்றன. ஒரு விமான டிக்கெட்டின் விலை ரூ.7,500 இல் இருந்து கிடைக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்தும் நீங்கள் அயோத்திக்கு விமானம் அல்லது ரயில் மூலம் பட்ஜெட் ட்ரிப் திட்டமிடலாம்.

அயோத்தியில் தங்குமிடம் :

ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அயோத்தியில் ஹோட்டல் புக்கிங் கட்டணங்கள் எகிறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆகையால், நீங்கள் திறப்புவிழாவுக்கு பிறகு, அயோத்தியில் ஹோட்டல் கட்டணங்கள் விலை பாதியாக குறைந்து விடும். ஜனவரி 22 ஆம் தேதி அன்று நீங்கள் ஹோட்டல் சர்வீஸ் ப்ரொவைடர் தளங்களில் கம்மி பட்ஜெட்டில் ரூம் புக்கிங் செய்து கொள்ளுங்கள்.

அயோத்தியில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்:

அயோத்தியில் ராமர் கோவிலை தவிர்த்து நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன!

1. சாய் நகரில் அமைந்துள்ள ஹனுமான் கர்ஹி, இந்துக் கடவுளான ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில். 2. அயோத்தியில் உள்ள தேரி பஜாரை ஒட்டி நாகேஷ்வர்நாத் கோயில் அமைந்துள்ளது. இது ராமரின் மகனான குஷ் அல்லது குஷாவால் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 3. துளசி நகரில் ராம ஜென்மபூமியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கனக் பவன், இது கடவுள் ராமர் மற்றும் அவரது மனைவி சீதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித தலம். 4. அயோத்தியின் நயா காட் பகுதியில் அமைந்துள்ள த்ரேதா கே தாக்கூர். 5. வைதேகி நகரில் அமைந்துள்ள ரோஜாக்களின் தோட்டம் என்றும் அழைக்கப்படும் குலாப் பாரி. 6. பைசாபாத் நகரத்தில் உள்ள மக்பரா சாலையில் அமைந்துள்ள பஹு பேகம் கா மக்பரா “கிழக்கின் தாஜ்மஹால்” என்று பிரபலமாக அறியப்படுகிறது. 7. 16 ஆம் நூற்றாண்டின் துறவி-கவிஞரான கோஸ்வாமி துளசிதாஸின் நினைவாக நிறுவப்பட்ட துளசி ஸ்மாரக் பவன். 8. அயோத்தியின் ராஜ்கோட்டில் ராம் ஜன்மன்ஹூமியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சீதா கி ரசோய், சீதா தேவியே பயன்படுத்திய பழங்கால சமையலறையாக நம்பப்படுகிறது. 9. வால்மீகி பவன் அல்லது மணிராம்தாஸ் சாவ்னி என்றும் அழைக்கப்படும் சோட்டி சாவ்னி. 10. குப்தர் காரில் ககர் (சரயு) ஆற்றின் கரையில் அமைந்துள்ள பைசாபாத் ராஜா மந்திர். 11. திறந்தவெளி திரையரங்குகள் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட புல்வெளிகள் கொண்ட ராம் கதா பூங்கா. 12. ஸ்ரீ ராமரின் தந்தையுமான தசரத மன்னரின் அசல் இல்லமா தஷ்ரத் பவன்.