Ayodhi Ramar Temple

அயோத்தி ராமர் கோவில் :

அழகான அயோத்தி கோயில் வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சராயு நதிக்கரையில் அமைந்துள்ளது . அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக உத்திர பிரதோச அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவிலின் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் இந்த அயோத்தி கோயில் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் மையப் புள்ளியாக இருந்து, யாத்ரீகர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் புகலிடமாக அமைகிறது.

இந்திய சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவரும் விதத்தில் இந்த கோயில் உள்ளது. இது எதிர்காலத்தில் நம்முடைய மிகப்பெரிய வரலாற்று சின்னமாக திகழும் என்பதில் ஐயமில்லை. கோயிலின் பிரமாண்டமும் அதன் வரலாற்று புராணங்களும் காண்போரை வெகுவாக கவரக்கூடியது. ஆழமாக பதிந்த ராம காவியம் இந்து புராணங்களின் படி, ராமாயண காவியத்தின் ஆழமான பொக்கிஷம் இந்த கோயில் எனலாம்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

16 ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டதன் மூலம் அயோத்தி ஒரு மத மையமாக முக்கியத்துவம் வாய்ந்தது. 2019 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வரும் வரை பாபர் மசூதி பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்தது. பிறகு சாதகமான தீர்ப்புக்கு பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான வழி கிடைத்தது. பிறகு நம்முடைய பாரம்பரிய கட்டடக்கலையைக் கொண்டு இந்த ராமர் கோயில் சிறப்பாக கட்டப்பட்டது. ராமாயணத்தின் அத்தியாயங்களை விவரிக்கும் சிக்கலான சிற்பங்கள் மற்றும் நம்முடைய இந்திய கட்டடக்கலையை பறைசாற்றும் சிற்பங்கள் என நிறைய சிற்பங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. கருவறையில் ராமரின் தெய்வ சிலை இடம் பெற்றுள்ளது. ராமர் அங்கிருந்து எழுந்தருளி தன்னுடைய அன்பான மக்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும் கோயில் வளாகம் பக்தி மற்றும் கட்டிடக்கலை நுணுக்கத்திற்கு ஒரு பரந்த சான்றாக என்றென்றும் திகழ்கிறது.

 

​கிட்டதட்ட ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.

கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைய உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதோடு மிக முக்கியமாக ராம் ஜென்ம பூமியையும், அயோத்தியில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஹனுமன் கோவிலையும் இணைக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹனுமனையும் தரிசிக்க செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராம் ஜெயண்ட பூமி பாத் 30 மீட்டர் அகலமும், பக்தி பாத் 14 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.

இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாயாகும்.

1000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் ராமர் கோவிலை கட்டி வருகிறது. பல கட்ட சோதனைகள் நடத்தி, ஸ்திரதன்மை ஆராயப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.