Events

Magara rasi palangal Ragu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Magara rasi palangal Ragu ketu peyarchi 2019

 மகர ராசி வாசகர்களேஎப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழ்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களைத் திக்குத் திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் மனம் தவித்ததே! ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனிப் பாசத்துடன் நடந்துகொள்வார்கள்.

சந்தேகத்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி, ஆரோக்கியம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்தி ரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தூக்க மின்மை, திடீர்ப் பயணங்கள், சுபச் செலவுகள் வந்து போகும்.

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களைப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். யாருக்கும் ஜாமீன், உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும்.

செவ்வாயின் மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். என்றாலும் பணவரவு உண்டு. புது வேலை கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத் தடைகள், தலைச் சுற்றல், நெஞ்சுவலி தந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளை களின் கூடாப் பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைபட்ட திருமணம் முடியும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். வாகனத்தில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும் போதும் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வழக்கால் நிம்மதியை இழப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் இக்காலக்கட்டத் தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வாகனம், செல்போன் வாங்குவீர்கள். வேலை அமையும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் மன அழுத்தம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்செரிச்சல், வாயுத் தொந்தரவு வந்து போகும். யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பலவீனத்தைச் சிலர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். பணம், நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

இந்த ராகு-கேது மாற்றம் பிரச்சினைகளின் புயலில் சிக்கியிருந்த உங்களைக் கரையேற்றுவதுடன் அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: திங்கட்கிழமையன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளை வணங்குவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  தியானேஷ்வரா தியானேஷ்வரா பாடல் வரிகள் | Thiyaneswara thiyaneswara song lyrics in tamil

  தியானேஷ்வரா தியானேஷ்வரா பாடல் வரிகள் |  Thiyaneswara Dhyaneshwara Lyrics in tamil ஜோதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மென்மையான சிவபெருமான்… Read More

  4 days ago

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

  Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம் - முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் வைகாசி… Read More

  4 weeks ago

  ஆதி சங்கரர் முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil

  ஆதிசங்கரர் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil (சற்று நீண்ட பதிவு பொறுமையாக… Read More

  1 month ago

  இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் – கருத்து கதைகள்

  இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்.. பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு காரணமாகும். சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும் மனக்… Read More

  1 month ago

  63 நாயன்மார்கள் சுருக்கமான வரலாறு | 63 Nayanmaargal Life story

  63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கம்... 63 Nayanmaargal Life story 1. திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை… Read More

  1 month ago

  நேர்மை கூட ஒரு போதை தான் | Honesty Moral Story

  நேர்மை கூட ஒரு போதை தான் ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப்… Read More

  1 month ago