சிம்ம ராசி வாசகர்களே
ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 11 ம் வீட்டில் இருந்து அதிர்ஷ்ட காற்று வீசிய ராகு இப்போது ராசிக்கு 10 ம் வீட்டிற்கு வருகிறார். இதனால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு ஏதுவான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும். இதன் பொருட்டு பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தம்பதியர்க்குள் இணக்கம் அதிகரிக்கும்.
கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 5 ம் இடத்தில் இருந்த கேது பகவான் பல முரண்பட்ட பலன்களை அளித்து வந்தார். இதனால் உறவினர்கள் மத்தியில் பகை உணர்வு ஏற்பட்டிருக்கும். இனி உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. உங்கள் பேச்சில் ஒரு முதிர்ச்சி தன்மை தென்படும். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
மகம்:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.
பூரம்:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
உத்திரம் – 1:
இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4
மலர்பரிகாரம்: வில்வ இலை மற்றும் மல்லிகை மலர்களை சிவனுக்கு அர்பணித்து வணங்க வேண்டும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமசிவாய நம: என்று தினமும் 11 முறை கூறவும்…