தனுசு: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) Thanusu rasi palangal Rahu ketu peyarchi 2020

தனுசு ராசி வாசகர்களே,

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து வெளியில் சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை கொடுத்துவந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டில் வந்து அமர்கிறார். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். இனி குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் 2 ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும் இருந்து வந்த பண தட்டுப்பாடு விலகி சீரான தன வரவுக்கு வழி வகுப்பார் இதனால் கொடுக்க வேண்டிய கடன்களை அடைக்கும் நிலை உண்டாகும். மனம் நிம்மதி அடையும். வேலையில் இருந்து வந்த மந்த நிலை மாறி நிலையான வேலையில் அமருவர். சொத்து பிரச்சனைகளில் ஒரு சுமூக தீர்வு கிடைக்கும்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து உடல் நிலையில் தொந்தரவு கொடுத்து வந்த கேது பகவான் இனி 12 ம் வீட்டில் சென்று அமர்கிறார். இது திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் காலமாக மாறும். உங்கள் கனிவான பேச்சி பலரையும் வசிய படுத்தி உங்கள் தொழில் முறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புது தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும் . சிலர் வியாபார விருத்திக்கு முதலீடு செய்வர் அதில் பன் மடங்கு லாபமம் அடைவர். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் பக்குவ தன்மை தென்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய தோழிகளின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மூலம்:

இந்த பெயர்ச்சியின் பலனால் உத்தியோகத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

 

பூராடம்:

உங்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

 

உத்திராடம் – 1:

இந்த ராகு கேது பெயர்ச்சியில் எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எல்லா பிரச்சனைகளையும் தீரும். எதிர்ப்புகள் அகலும். உங்களது நியாயமான திட்டங்களுக்கு மற்றவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.

பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6, 9

மலர் பரிகாரம்: சாமந்தி மற்றும் மல்லிகை மலரால் சிவனுக்கு நாமம் சொல்லி தினமும் வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “த்ரியம்பகம் யஜாமஹே” என்று தொடங்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

Leave a Comment