Kadaga rasi palangal rahu ketu peyarchi 2020

கடகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

கடக ராசி வாசகர்களே

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 12 ல் இருந்து அமைதியை குலைத்து பல விதமான நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருந்த ராகு பகவான்இனி உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு வருகிறார். இது ஒரு சுப பலனை காட்டுகிறது. லாப ஸ்தானதில் அமரும் ராகு பகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் அளித்து புது புது முயற்சிகளில் இறங்க வைத்து அதில் வெற்றியையும் பண வரவையும் அளிப்பார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும். பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

கேது பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 6 ம் இடத்தில் அமர்ந்த கேது பகவான் உங்கள் ராசிக்கு 5 ம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்று தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். சப்தம பார்வையாக உங்கள் ராசியை குரு பகவானும் பார்க்க போவதால் இனி ஒரு வருட காலத்திற்கு உங்களுக்கு வசந்த காலமென்றே சொல்ல வேண்டும். சிலருக்கு விபரீத ராஜ யோக அமைப்பு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் தொடங்க வழி கிடைக்கும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் சுமூக போக்கு உண்டாகி சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேற்றுமை மாறும்.

புனர்பூசம் – 4:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

பூசம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

ஆயில்யம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும் போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்…

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

மலர்பரிகாரம்: மல்லிகை மலர்களை அம்மனுக்கு மாலை கட்டிப் போட நன்மை பெருகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நம: என்று தினமும் 21 முறை கூறவும்.

ராகு பகவான் 108 போற்றி

கேது பகவான் 108 போற்றி

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

 

Leave a Comment