மேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 ) Mesha rasi palangal rahu ketu peyarchi 2020

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலாபலன்களை வழங்குவார்கள்.

மேஷம்

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 3 ம் இடத்தில் இருந்து காரியங்களில் வெற்றியும் , மன தைரியத்தையும் அளித்து வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு 2 ம் வீட்டில் அமரபோகிறார். பேச்சில் சற்று நிதானம் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் ஆகவே சேமிப்பை அதிகபடுத்தவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குலையும் எனவே விட்டுக்கொடுத்து போவது நல்லது. எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பெண்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இருந்து பண விரையம், வீண் செலவுகளை கொடுத்து வந்த கேது இப்போது 8 ஆம் வீட்டில் நுழைவதால் சற்று பொறுமையை கடைபிடிக்கவும். தெய்வீக சிந்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் இருந்து வந்த மந்த போக்கு விலகி புது புது உத்திகளை கையாண்டு பெரும் லாபத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் அதிகரிக்கும். உடன் பணியாற்றுபவர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி நட்பு பாராட்ட படுவீர்கள். சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டாகும்.

 

அஸ்வினி:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

பரணி:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும்.

கார்த்திகை – 1:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 7, 9

மலர்பரிகாரம்: அரளி மலர்களால் முருகனை அர்ச்சனை செய்ய வேண்டும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

Leave a Comment