Temples

kedarnath temple history tamil | கேதார்நாத் கோயில் முக்கோண வடிவ லிங்கம்

இயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் #கேதார்நாத்_கோயில் : முக்கோண வடிவ லிங்கம் உள்ள அதிசய கோயில்

இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலைச் சிறு துரும்பும் அந்த சீற்றங்களால் அசைக்க முடியவில்லை. இறைவன் தன் திருவிளையாடலைப் பல இடங்களில் ஆடினாலும் இந்த கோயில் தனிச் சிறப்பைக் கொண்டது. பெரும் வெள்ளத்தால் அந்த பகுதியே சிதைந்தாலும் கோயில் தன் கம்பீரத்தைக் கைவிடாமல் நிலைத்திருக்கிறது. வாருங்கள் அந்த கோயிலின் சிறப்பைக் காணலாம்!
இயற்கை சீற்றத்தில் தப்பித்த ​கேதார்நாத் கோயில்

கேதார்நாத் கோயில்

இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகவும் இந்த கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பஞ்ச கேதார ஆலயங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களில் ஒன்றாகவும் அமைந்த சிறப்பைப் பெற்றது. மேலும் இந்த கோயிலானது பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கேதர்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் மிகவும் பயங்கரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய ஆக்ரோஷமான இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தது.

அந்த பேரழிவுகள் நிகழ்ந்த போதும் இந்த கோயிலில் ஒரு சிறிய விரிசல் கூட ஏற்படவில்லை என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்களுக்கே கூட ஆச்சரியமான விசயமாக இருந்தது. மேலும் ஒரு ஆச்சரியமாக அந்த முழு பேரழிவின் மைய புள்ளியும் கோயிலுக்கு சற்று மேலே சில மீட்டர் தொலைவிலேயே இருந்தது.

ஆனாலும் இந்த வெள்ளத்தையும் நிலச்சரிவையும் கோயில் சுவரின் பின்புறத்திலிருந்த பெருங்கற்பாறையானது தடுத்து இந்த கோயிலைப் பாதுகாத்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மோசமான பாதிப்புகளைத் தாங்கிக் கொண்டு இயல்பாக இருக்கும் இந்த கோயிலானது மேலும் பல நூற்றாண்டுகள் நிலைத்து உயிர் வாழும் திறனைக் கொண்டது என்று கட்டிட வல்லுநர்களால் கூறப்படுகிறது.

கேதார்நாத் கோயில் அமைவிடம்

கேதார்நாத் கோயில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் என்னும் பகுதியில் இருந்து சுமார் 223 கி.மீ தூரத்தில் 11,755 அடி உயரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள கர்வால் இமய மலையின் எல்லையில் அமைந்துள்ளது. கோயிலானது கடுமையான தட்ப வெட்ப நிலையைக் கொண்டுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் (அக்ஷ்ய திரிதியில்) இருந்து நவம்பர் மாதத்தின் கார்த்திகை பௌர்ணமி (இலையுதிர் காலத்தின் முழு நிலவு) வரை என ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

மற்ற மாதங்களில் கோயிலின் சிலைகளைக் குப்தகாசியின் உகிமத் என்னும் இடத்திற்குக் கொண்டு சென்று வழிபடுவது நடைமுறையாக உள்ளது. இக்கோயிலை அடைய 14 கி.மீ. நடைப்பயணமாகவோ அல்லது குதிரைவண்டியிலோ அல்லது பல்லக்குச் சேவைகளின் மூலமாகவோ மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும்.

மகாபாரதப் போரின் விளைவாக பாண்டவர்கள் தன் உறவினர்களையும் ஏராளமான உயிர்களையும் கொன்றதால் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள சிவ பெருமானைத் தேடி ஒரு பயணத்தை மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் கேதார்நாத் பகுதியில் வந்தடைந்த போது அங்கு ஒரு பெரிய அளவிலான காளை எருமையைக் கண்டார்கள். அந்த எருமையானது பீமனுடன் சண்டையிட்டது. அச்சண்டையில் பீமன் அந்த எருமையின் வாலைப் பிடித்து இழுத்து சண்டையிட்ட போது அந்த எருமை இரண்டாக பிரிந்தது.

பிரிந்த எருமையின் முன் பகுதியானது நேபாளத்தில் உள்ள சிபாடோல் என்னும் பகுதியில் விழுந்தது அந்த பகுதி தற்போது டோலேஷ்வர் மகாதேவ் கோயிலாக உள்ளது. அந்த எருமையின் பின்பகுதி விழுந்த இடம் கேதார் பகுதியாகும் அதுவே தற்போது கேதரேஸ்வரர் ஆலயமாக மாறியுள்ளது. அந்த சண்டையின் இறுதியில் கேதார்நாத் பகுதியில் சிவபெருமான் ஒரு முக்கோண வடிவ லிங்கமாக பாண்டவர்களின் முன்பு தோன்றினார்.

அப்போது பீமன், தாம் சிவனுடன் சண்டையிட்டோம் என்பதை உணர்ந்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார். பாண்டவர்களின் பாவத்தைப் போக்கிய சிவபெருமான் கேதரேஸ்வரராக பாண்டவர்களிடம் என்னுடைய பக்தர்கள் இங்கு பக்தியோடு வந்து தரிசனம் செய்தால் என் அருளைப் பெறுவார்கள் என்று கூறி மறைந்தார்.

முதன்முதலில் இந்த இடத்தில் கோயிலை அமைத்த பெருமை இங்கு தவம் செய்த பாண்டவர்களையே சாரும். அதன் பிறகு இந்த கோயில் அர்ஜுனனின் பேரன் ஜனமேஜயா என்பவரால் மேலும் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது அமைந்துள்ள கட்டிட அமைப்பானது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரரின் வருகையின் போது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் லிச்செனோமெட்ரிக் டேட்டிங் செயல்முறை மூலம் நிறுவுவது என்னவென்றால் இந்த கோயில் கிபி 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலிருந்து 1748 ஆம் ஆண்டு வரை பனி காலத்தின் உக்கிரமான வீரியத்தால் சுமார் நான்கு நூற்றாண்டுகள் பனி முழுவதும் சூழ்ந்து இக்கோயிலானது மூடப்பட்டிருந்தது.

தரையிலிருந்து ஆறு அடி உயர மேடையில் இந்த கோயிலானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் சுமார் 85 அடி உயரமும் 187 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டது. கோயிலின் சுவர்கள் 12 அடி தடிமன் கொண்டவையாகவும் வலுவான கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலில் கர்ப்பக்கிரகமும் ஒரு மண்டபமும் உள்ளன. மேலும் முன்புறத்தில் நந்தி சிலை அமைந்துள்ளது.

கோயில் அமைந்துள்ள பகுதியானது செங்குத்தான பாறைகள் நிறைந்ததாகவும் மற்றும் பனிப்பாறைகள் சூழப்பட்டதாகவும் உள்ளது. ஆதிசங்கரர் இந்த கேதார்நாத்தில் தான் மகா சமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கோயில் வளாகத்தின் பின்னால் அவருடைய சமாதிக்கு ஒரு சன்னதியும் உள்ளது.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago