Temples

மாசாணி அம்மன் கோவில் | Masani Amman Temple Pollachi

Masani amman temple pollachi

பொள்ளாச்சியில் உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் (Masani amman temple) . அந்த வரலாறு தெரிந்த கதை தெரியாத வரலாறு. இந்த பதிவில்  நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு
மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களை அன்னையிடம் சொல்லி மாசற்ற மனதுடன் அன்னையை  வேண்டுவோம் .
இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு

மாசாணி அம்மன் கோவில் – ஸ்தல வரலாறு

சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே தனி.

இனி வரலாற்றைக் காண்போம்.

ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர். தன் உடலையே திரியாக்கி எரித்து காயத்ரி மந்திரத்தை போதித்தவர்.
இத்தகைய தவசீலர் ராஜரிஷி என்ற பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்ற பெயருடன் விளங்கினார்.இவர் ஒரு முறை கனக மலையில் தவம் செய்து கொண்டிருந்தார் .அப்பொழுது தாடகை என்ற இராட்சசி அவரது தவத்திற்கு இடையூறு செய்தாள். தாடகை விரதம் இருந்து பல வரங்களையும் படைபலத்தையும் பெற்றவள்.மேலும் ராவணனிடம் இருந்தும் பல சக்திகளைப் பெற்றவள்.

இறுதியாக விசுவாமித்திரர் தாடகையை அழிக்க தசரதனின் மகன்கள் ராமர் லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்து அவளை அழிக்க வேண்டி கூறுகிறார். ராமர் அவளை பெண் என்று யோசித்தாலும்‌ அவள் சகலமும் நிறைந்தவள் அவள் பெண்ணே அல்ல அவள் ஒரு ராட்சசி என்று கூறி அவளை வதம் செய்யுமாறு கூறுகிறார் .அவ்வாறு வதம் செய்வதற்கு முன்புஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஈஸ்வரியை நோக்கி தவம் செய்கிறார். ஈஸ்வரியும் ராமச்சந்திரமூர்த்தி முன் தோன்றி தாடகையை எவ்வாறு வதம் செய்ய வேண்டும் என்று சில சூட்சுமங்களை கூறுகிறார்.

அதாவது முதலில் தன்னை ஒரு மண்ணால் ஈஸ்வரி போல் உருவாக்கி அந்த மண்ணினால் செய்யப்பட்ட விக்கிரகத்தை அழித்துவிட்டு பிறகு தாடகையை வதம் செய்யுமாறு கூறுகிறார். அதேபோல் ராமச்சந்திர மூர்த்தியையும் ஈஸ்வரியை மண்ணால் உருவாக்கி பூஜை செய்து தாடகையை வதம் செய்யச் சென்று விடுகிறார் .அந்த நேரத்தில் மண்ணால் செய்த ஈஸ்வரியை அழிக்க மறந்துவிடுகிறார். தாடகையை வதம் செய்தபின் ஞாபகம் வந்து அதை அழிக்க முற்படும்போது ஈஸ்வரி தோன்றி அதை அழிக்க வேண்டாம் அது அங்கேயே இருக்கட்டும் என்று கூறுகிறார் அவ்வாறு உருவானதுதான் மாசாணி அம்மன். இது ஒரு வரலாறு.

மாசாணி அம்மனைப் பற்றிய வேறு ஒரு வரலாறும் உண்டு அதையும் சற்று காண்போம்.

ஆனை மலைக்கு அருகில் உள்ள அழகிய ஒரு கிராமத்தில் மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர் அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர் .அவ்வாறு வாழ்ந்து வந்த நேரத்தில் மனைவி கருவுற்றாள். கணவனும் மனைவியும் அன்பாக இருந்த காரணத்தால் மனைவி தாய் வீடு கூட செல்லாமல் பிரசவத்தை தன் கணவன் முன்னிலையே நடத்திக் கொள்ள விரும்பினாள். நாட்கள் செல்லச்செல்ல பிரசவ வலி அதிகமானது மனைவி படும் துயரத்தை தாங்கமுடியாத கணவன் வலி மிகுந்த நேரத்தில் அவளை சற்று ஆசுவாச படுத்தி விட்டு மருத்துவச்சியை அழைத்து வரக் கிளம்பினான்.

ஆனால் அதே சமயம் மனைவியை தனியாக விட்டு செல்வதற்கும் அவனுக்கு பயம். இவன் தனியாக சென்று மருத்துவச்சியை அழைத்து வருவது என்றால் மனைவியை தனியாக விட முடியாது. அடர்ந்த காடு வனவிலங்குகள் அதிகம். அருகில் மனிதர்கள் யாரும் இல்லையே என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான்.அதை புரிந்துகொண்ட அவன் மனைவி இரண்டு கல் தொலைவில் உள்ள என் தாயார் வீட்டிற்கு நாம் செல்வோம் .அங்கு ஒரு மருத்துவச்சி இருக்கிறார் .அவர் முக்காலமும் உணர்ந்தவர்.தெய்வ சிந்தனையும் நற்பண்புகளும் ஞானத்தால் நடப்பதை அறியும் திறனும் பெற்றவர். நன்கு மருத்துவம் செய்வார். அவரிடம் செல்வோம். கஷ்டப்பட்டு நான் தங்களுடன் நடந்து வருகிறேன் என்று கூறினாள்.

பிரசவ வேதனையும் வலியும் தாங்க முடியாத நிலையை எட்டியதால் வேறு வழி இன்றி தாய் வீடு நோக்கி பயணமானார்கள் .மெதுவாக நடந்து நடந்து ஒரு மைல் தூரம் வந்து சேர்ந்துவிட்டார்கள் .அதற்கு மேல் அவளால் ஒரு அடி கூடஎடுத்து வைக்க முடியவில்லை .சற்று தூரத்தில் பார்த்தால் விளக்கு ஒளி தெரிந்தது. அச்சமயம் கணவனிடம் என்னால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது .தாங்கள் சென்று அந்த விளக்கு வெளிச்சத்தில் மனிதர்கள் இருப்பார்கள்.அங்கு மருத்துவச்சியும் இருப்பார்கள் .தயவு செய்து அழைத்து வாருங்கள். நான் எங்கும் போகமாட்டேன். இங்கேயே அமர்ந்து இருக்கிறேன் என்று உறுதிபட கூறினாள்.கணவன் வேறு வழியின்றி அவளை அங்கு அமர வைத்து விட்டு வெளியே விளக்கு வெளிச்சத்தை நோக்கி செல்லலானான்.

மிகுந்த மனவருத்தத்துடன் வேறு வழியின்றி வெளிச்சத்தை நோக்கி சென்று மருத்துவச்சியின் வீட்டுக்கதவை தட்டினான். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்ல அவளும் மருத்துவ சாதனங்களையும் உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு அந்த ஊர் தலையாரி இன்னும் சில முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு மனைவி இருந்த இடத்திற்கு அனைவரும் வந்தார்கள். அங்கு வந்து பார்த்த பொழுது மனைவியை காணவில்லை .இது என்ன இறைவா சோதனை மனவேதனை என்று அனைவரும் வருநதிக் கொண்டிருந்தார்கள் .அப்பொழுது மருத்துவச்சி ஆஹா நான் கண்ட கனவு பலித்துவிட்டது என் கனவு நிஜம் ஆகிவிட்டதே என்று யோசிக்கத் தொடங்கினாள்.அப்பொழுது அவர்கள் அங்கு கண்ட காட்சி மயிர்க்கூச்செறிய வைத்தது .ரத்தம் உறைய வைத்தது.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவனது மனைவியும் புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்து கிடந்ததை கண்டு கதறி உடனே அந்த மருத்துவச்சியிடம் அம்மா தாங்கள் கண்ட கனவு பலித்து விட்டது என்று கூறுகிறீர்களே தாங்கள் என்ன கனவு கண்டீர்கள். என்ன நடந்தது என்று சற்று விளக்கமாக கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

உடனே அவர் கூறலானார் .நீ மனைவியை விட்டு வந்தவுடன் ஒரு பெரிய கருத்த உருவம் ஒன்று இவளை நோக்கி கையை நீட்டிக் கொண்டு வந்தது .அது கண்டு அவள் பயந்து எழ முடியாமல் எழுந்து ஓட ஆரம்பித்தாள் .ஆனால் ஒரு அளவுக்கு மேல் ஓட முடியாமல் என்னை விட்டு விடு விட்டு விடு என்று அந்த கரிய உருவத்திடம் கெஞ்சினாள் .ஆனால் அந்த கோர உருவமும் விடாமல் அவளைத் துரத்தியது. அந்த நேரம் அவளுடைய போறாத காலம் அவள் அங்கிருந்து மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து உயிர் நீத்தாள்.

அதே நேரத்தில் அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்து வானளாவி ஒரு பயங்கர ஜோதி ரூபமாய் கோடி சூரிய பிரகாசமாகத் தோன்றி நீண்ட உருவாமாய் திறந்த வாயுடனும் கைகளில் வேலுடனும் ஆயுதங்களுடனும் அந்த கரிய கொடிய உருவத்தை நோக்கி வந்து அவனுடைய மார்பைப் பிளந்து அந்த பெண்ணின் காலடியில் போட்டு விடுகிறது. இதுவே தான் கண்ட கனவு என்று அந்த மருத்துவ மூதாட்டி அவள் கணவனிடம் கூறினாள்.

மேலும் அவள் சாதாரண பெண்ணல்ல. வானில் தேவலோகத்திலிருந்து மண்ணில் உதித்த பெண் அவள். அவள் பக்தர்களை மனிதர்களை இரட்சிக்க வேண்டி உருவான தெய்வாம்சம் பொருந்திய பெண்ணவள் என்றும் மற்றும் காமதேனுவினால் இடைப்பட்ட சாணத்தில் கால்வைத்து இறக்காமல் இருந்திருந்தால் வேறு ஒரு ரூபத்தில் அவள் இறந்திருப்பாள். மாட்டுச்சாணத்தில் கால் வைத்து வழுக்கி விழுந்து இறந்தததனால் மாசாணி என்று பெயர் பெற்றார்.

மேலும் இவள் மானிடப்பிறவி அல்ல தெய்வப்பிறவி .ஆனாலும் இந்த அரக்கனை அழிக்க வேண்டி உருவானவள் என்பதனாலும் இந்த தெய்வாம்சம் பொருந்திய அம்மனை அரக்கன் காலடியில் உள்ள இந்த அம்மனுக்கு ஒரு கோயில் கட்டி பூஜித்து வழிபாடு செய்ய வேண்டும். மாட்டு சாணத்தில் கால்வைத்து விழுந்ததால் மாசாணி என்றும்இன்று முதல் அவளுக்கு பெயரும் விளங்கும் என்று அங்கிருந்த மக்கள் கூறினார்கள் .அதுவே மாசாணி அம்மன் என்ற பெயர் வரலாயிற்று.

இந்த அம்மனை தொழுபவர்களுக்கு பில்லி சூனியம் மாதவிடாய்க் கோளாறு பேய் பிசாசு முதலிய பிடித்திருப்பவர்கள் ஒருமுறை மாசாணியம்மன் கோயில் சென்று வணங்கிவிட்டு வந்தால் அத்தனை பீடைகளும் நோய்களும் துன்பங்களும் நீங்கும் என்றும் மாசாணி அம்மன் வரலாறு கூறுகிறது .மேலும் பொன் பொருள் நகை போன்றவற்றை திருடிச் சென்றோ இல்லை பணம் வாங்கிக்கொண்டு இல்லை என்று கூறுபவர்களுக்கோ பழிதீர்க்க அங்கு மிளகாய் அரைத்து வைக்கும் நிகழ்ச்சியும் உண்டு .அங்கு உள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயை அரைத்து வைத்து மூன்று மாதம் வரை காத்திருந்தால் எடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கொண்டுவந்து குடுத்து விடுவார்கள். இல்லை துரோகம் செய்தவர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள். அவ்வாறு கேட்கவில்லை என்றால் அவர்கள் உடல் மிளகாய் தேய்த்தது போல் எரியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே அவர்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு மீண்டும் பாலபிஷேகம் இளநீர் போன்றவற்றை செய்து அம்மனை குளிர்ச்சி செய்ய வேண்டும்.

இது தவிர மாசாணி அம்மனை பற்றிய மூன்றாவது ஒரு வரலாறும் உண்டு அதையும் சற்று காண்போமா.

ஆனைமலையை நன்னன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் மிகவும் சக்தி வாய்ந்த சுவையுடைய ஒரு மாங்கனியை கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து தாங்கள் இக்கனியை உண்ண வேண்டும் இது மிகவும் சக்தியும் சுவையும் வாய்ந்தது . அதை உண்டுவிட்டு அதனுடைய கொட்டையை தாங்கள் ஆற்றில் எறிந்து விட வேண்டும் என்று கூறினார் .மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார் .அவன் அந்த மாங்கனியை உண்டு அதன் சுவையால் கவரப்பட்டு ஈர்க்கப்பட்டு முனிவர் கூறிய படி செய்யாமல் அந்தக் கொட்டையை தன்னுடைய அரண்மனையில் நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தான். அதை மிகவும் கவனமாக போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தான் நாளடைவில் அது வளர்ந்து விருட்சமாகி ஆகியது.

ஆனால் அதிசயம் என்னவென்றால் அவ்வாறு வளர்ந்து பெரிய மரமாக ஆன அந்த மரத்தில் ஒரு பிஞ்சோ கனியோ ஒன்று கூட விடவில்லை. நாளடைவில் அதிலிருந்து பூக்கள் மட்டும் தோன்றி உதிர்ந்தன. மன்னன் காத்து காத்து ஏமாந்து அதிசயித்து பின் இறுதியாக கனி கொடுத்த அந்த முனிவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்தான். அவரைத் தேடி அழைத்து வந்த உடன் முனிவரும் மன்னா நான் தங்களுக்கு கொடுத்த கனி மரத்திலிருந்து பறிக்கப்பட்ட கனியல்ல. பலவருடம் தவம் செய்து என்னுடைய குருநாதர் எனக்கு விரும்பி கொடுத்த கனி .அதை நான் உண்பதைக் காட்டிலும் நாடாளும் மன்னன் ஆகிய நீ சுவைப்பது தான் சாலச்சிறந்தது என்றுதான் நான் உன்னிடம் கொடுத்தேன். நான் கூறியதற்கு மாறாக நீ கொட்டையை ஆற்றில் வீசாமல் நட்டு வைத்ததால் வீண் வம்பை விலைக்கு வாங்கி கொண்டாய்.மேலும் அந்த கனி ஒரு முறை தான் காய்க்கும் .ஒரு பழம்தான் காய்க்கும். மீண்டும் அது காய்க்காது. அதுமட்டுமல்லாது ஒரு நாட்டில் விளைந்த கனியை மற்றொரு நாட்டில் உள்ளவர்கள் தான் உண்ண வேண்டுமே ஒழிய அந்த நாட்டில் உள்ளவர்கள் அந்தக் கனியை உண்ணக்கூடாது என்றும் இதனுடைய தாத்பரியம் கூறுகிறது என்றும் கூறினார்.

அப்படியானால் இந்த மரத்தில் விளையும் கனியை யார் உண்ண வருவார்கள் என்று துறவியிடம் மன்னர் கேட்டார் .அதற்கு துறவி வேறு நாட்டிலிருந்து வரும் ஒரு கன்னிப்பெண் தான் இந்த கனியை உண்பாள்.அவள் அஷ்டமாசித்திகளை உடையவள் .அவள் ஒரு தெய்வப்பிறவி.மேலும் அவள் மானிடப் பிறவியே அல்ல. சகல சக்திகளும் வாய்ந்தவள் .ஆதலால் நீ இந்த மரத்தினுடைய கனி தனக்கு கிடைக்கவில்லையே என்று மரத்தை அறுத்து விடாதே வெட்டி விடாதே சகல சக்தியும் வாய்ந்த ஒரு அம்மன் கன்னிப் பெண்ணாக வந்து இந்த மரத்தின் கனியை உண்பாள்.அதுவரை காத்திரு என்று கூறி அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

இம்முறையும் மன்னன் முனிவரின் பேச்சைக் கேட்க மறுத்து விட்டான் .அவர் சென்ற உடன் இந்த கனியை தானே சுவைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டான் .மேலும் அது விளையப்போகும் ஒரே ஒரு கனி .அதை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு பயங்கர காவல் வைத்தான். சதாசர்வகாலமும் 24 மணி நேரமும் காவலை நீட்டித்து கொண்டே இருந்தான்.

அதே நேரத்தில் வேறு நாட்டில் கரிமேசுவரன் என்ற ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவருடைய குலத்தொழில்யானை வியாபாரம் தான் .அவ்வாறு யானை வியாபாரம் செய்து கொண்டு அவர்கள் நாடு கடந்து வரும்போது தாரகன் என்ற ஒருவன் தன் மகளுடன் வந்தான். அவனும் அவன் மகள் தாரணியும் ஆனைமலை பகுதிக்கு வந்து ஒரு வீட்டில் குடியிருந்தார்கள்.தாரணி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் உடன் சென்று ஒருநாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் தாரணி எங்கு குளித்துக் கொண்டிருந்தாளோ அந்த ஆற்றின் அருகில் தான் அந்த மாமரம் இருந்தது .இவள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் மாமரத்தில் இருந்த கனி தானாக விழுந்து இவளை நோக்கி வந்தது.இவள் பொன்னிறமாக ஈர்க்கப்பட்ட அந்த கனியின் அழகில் மயங்கி அதை எடுத்து சுவைத்து விட்டாள்.உடனே செய்தி அரசனுக்கு எட்டியது அரசன் உடனே தாரணியையும் அவள் தந்தையும் அழைத்துவரச் செய்தான்.

தாரணியோ உடனே மன்னனிடம் இருகரம் நீட்டி உயிர்ப்பிச்சை வேண்டினாள்.மன்னா நாங்கள் வேறு நாட்டில் இருந்து வருகிறோம் .தாங்கள் முரசு அறிவித்தது தண்டோரா போட்டது எதையும் நாங்கள் அறியோம்.மேலும் ஒரு மாங்கனிக்காக கொலை செய்வார்கள் என்றும் எனக்குத் தோன்றவில்லை. ஆதலால் எங்களுக்கு உயிர் பிச்சை தந்தருள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். ஆனால் அவள் கோரிக்கையை செவிமடுக்காத மன்னன் அவளை கொலைக்களத்திற்கு அனுப்பினான். கொலைக்களத்திற்கு கொண்டு சென்று அவளைக் கொலை செய்தனர் .அந்த நேரத்தில் அவள் மன்னா நான் மரித்தாலும் மீண்டும் வருவேன். மிகுந்த சக்திவாய்ந்த தெய்வமாக விளங்குவேன். ஆனால் என்னைக் கொலை செய்த காரணத்தால் உன்னுடைய நாடும் மக்களும் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டு அவள் உயிர் நீத்தாள்.
அந்த பெண்ணின் உடலை அவள் தந்தை பெற்றுக்கொண்டார். பெற்றுக்கொண்டு அந்த பெண்ணிற்கு மண்ணால் அவரும் ஊரில் உள்ளவர்களும் சேர்ந்துஒரு உருவம் செய்தனர். அது நாளடைவில் மாங்கனிக்காக உயிர் விட்ட காரணத்தினால் மாங்கனி அம்மன் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மாசாணியம்மன் என்று மருவியது. அது சிறிய மயான அம்மனாக இருந்து நாளடைவில் வளர்ந்து பெரிய கோயில் ஆகி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக ஆகிவிட்டது .அதே நேரத்தில் நன்னனை எதிரி நாட்டுப் படைகள் சூழ்ந்து அழித்து ஒழித்து அவனது வம்சத்தையே பூண்டோடு அழித்தார்கள். இதுவே மற்றொரு வரலாறாகும்

மூலவர் : மாசாணியம்மன் (மயானசயனி )
தீர்த்தம் : கிணற்றுநீர் தீர்த்தம்
ஊர் : பொள்ளாச்சி, ஆனைமலை
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

மாசாணி அம்மன் கோவில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.. (கொரோனா காலங்களில் கோவிலை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு செல்லவும்… )

மாசாணி அம்மன் கோவில்  முகவரி:
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி – 642104, கோயம்புத்தூர் மாவட்டம்.

மாசாணி அம்மன் கோவில் தொலைப்பேசி எண்: +91-4253282337, +91-4253283173

நேர்த்திக்கடன்:
அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

மாசாணி அம்மன் கோவில் சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.

மாசாணியம்மன் 108 போற்றி

துர்க்கை அம்மன் 108 போற்றி

வாராஹி அம்மன் பாடல்கள்

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

1008 அம்மன் போற்றி

In this article you will get to know about the famous masani amman temple timings, history, address and contact number.

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Amman
  • Recent Posts

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி - Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும் (Chitra Pournami) .… Read More

    2 days ago

    ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil

    Chitra Gupta Pooja in Tamil ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு | chitra gupta pooja in tamil… Read More

    2 days ago

    Today rasi palan 24/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன் கிழமை சித்திரை – 11

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _ _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 11* *ஏப்ரல்… Read More

    19 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    6 days ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    6 days ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago