*நவகிரகங்கள் தான் நம் உறவினர்கள் !!*
மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகின்றன. சிவபெருமானிடமிருந்து உருவான நவகிரகங்கள் நம் வாழ்க்கையில் நமது உறவினர்களாக நம்மை சூழ்ந்துள்ளனர்.
🌟 நவகிரகங்களில் முதலாவதாக உள்ள சூரியன், தந்தை ஆவார்.
🌟 நவகிரகங்களில் இரண்டாவதாக உள்ள சந்திரன், தாய் ஆவார்.
🌟 சகோதர, சகோதரிகள் மற்றும் கணவனாக, நவகிரகங்களில் மூன்றாவதாக உள்ள செவ்வாய் உள்ளார்.
🌟 நவகிரகங்களில் நான்காவதாக உள்ள புதன், மாமன், மைத்துனர்கள் ஆவர்.
🌟 நவகிரகங்களில் ஐந்தாவதாக உள்ள குரு, புத்திரர்கள் ஆவார்.
🌟 நவகிரகங்களில் ஆறாவதாக உள்ள சுக்கிரன், மனைவி மற்றும் நண்பர்களாக நம்மை சூழ்ந்துள்ளனர்.
🌟 நவகிரகங்களில் ஏழாவதாக உள்ள சனி, பணியாட்களாக இருக்கின்றனர்.
🌟 நவகிரகங்களில் எட்டாவதாக இருக்கின்ற ராகு, தந்தை வழி தாத்தாவாகவும், பாட்டியாகவும் நம்மை சூழ்ந்துள்ளனர்.
🌟 கேது, நவகிரகங்களில் ஒன்பதாவதாக உள்ளார். இவர் தாய் வழி தாத்தாவாகவும், பாட்டியாகவும் நம்மை சூழ்ந்துள்ளார்.
🌟 ஆயிரம் கரங்கள் மறைத்தாலும், ஆதவன் ஒளி மறைவது இல்லை என்ற வரிகளுக்கு உரிய நவகிரகங்களின் தலைமை கிரகமான சூரிய பகவானின் பண்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
*சூரிய பகவானின் பண்புகள் :*
🌟 ஒளியை கொண்டவர்.
🌟 பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களின் உற்பத்திக்கு காரணமானவர்.
🌟 ஆரஞ்சு வண்ணத்தை சொந்தம் கொண்டவர்.
🌟 தன்னுடன் இணையும் அனைத்து கிரகங்களையும் அஸ்தமனம் செய்பவர்…