கும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) Kumba rasi Rahu ketu peyarchi 2020
கும்ப ராசி வாசகர்களே
ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 5 ல் அமர்ந்து தொல்லைகளை கொடுத்து வந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இனி பிள்ளைகளால் இருந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். வியாபாரத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அளவான லாபத்தை பெறுவீர்கள். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எந்த பிரச்சனைகளையம் சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள்.
கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 11 ம் வீட்டில் அமர்ந்து பல இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களை காத்து வந்த கேது பகவான் இனி ராசிக்கு 10 ம் வீட்டில் வந்து அமர்வதால் இனி எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க வைப்பார். சகோதரம் வகையில் இருந்து வந்த மோதல் விலகி அன்பு பாராட்டுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களின் அறிவை வளர்க்க புது முயற்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். தொழில் விருத்திக்கு அயராது பாடுபட்டு, அதில் வெற்றியும் அடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்.
அவிட்டம் – 3, 4:
இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
ஸதயம்:
இந்த பெய்ர்ச்சியில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி – 1, 2, 3:
இந்த பெயர்ச்சியில் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9
மலர் பரிகாரம்: சங்குபுஷ்ப மலரை சனிக்கிழமைதோறும் சிவனுக்கு படைத்து வேண்டுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்