10 RULES FOR SUCCESSFUL LIFE

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து
சூத்திரங்கள்:

1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே தவறை
இன்னொருவருக்கு
செய்துவிடக்கூடாது…

2.யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்…

3.நமக்கு பிடிக்காதவாரகவே
இருந்தாலும் அவரின்
சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து
சொல்லிவிட்டு செல்லுங்கள்…

4.’என்ன வாழ்க்கைடா இது’ என்று
நினைப்பதை விட,
‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று
எண்ணி வாழுங்கள்…

5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது
தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்…

6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான
அன்பு என்பது அதுதான்…

7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை
சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் தேடி வரும்…

8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம்
சிந்தியுங்கள்.. உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று…

9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல்
சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்…

10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்
செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்…

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications