நினைப்பு
ஸ்ரீ ரமண மகரிஷி.

நேரம்ன்னா என்ன?

அது கற்பனை.

உங்களோட ஒவ்வொரு கேள்வியும்
ஒரு நினைப்புதான்.

உங்களுடைய
இயல்பே சுகம் தான். அமைதி தான்.

நினைப்பு தான் ஞானத்துக்கு தடை.

ஒருத்தரோட தியானமோ, ஏகாக்கிரமோ நினைப்பைப் போக்கறதுக்குத்தான்.

ஞானத்தை அடையறதுக்கு இல்லே. அமைதியே உண்மையான ஆத்ம சுபாவம்.

அப்போ எனக்கு அமைதி இல்லேன்னு நீங்க சொன்னேள்னா…. அது உங்களோட நினைப்புதான். அது ஆத்மா இல்லை.

தியானம் பண்றது இந்த மாதிரி நினைப்பைப் போக்கறதுக்குத்தான்.

ஒரு நினைப்பு எழுந்தா, அப்பவே அதைப் பாத்துடணும். அதோட சேரக்கூடாது.

சேந்தா அது அடுத்த நினைப்புக்குக் கூட்டிக் கொண்டு போகும்.
அது அடுத்ததுக்கு…
அப்புறம் அதோகதி தான்.

நீங்க உங்களை மறக்கறதனாலேயே உடம்பை நினைக்கறேள்.

ஆனா உங்களை மறக்க முடியுமா? நீங்க நீங்களாவே இருக்கும்போது எப்படி மறக்க முடியும்?

இரண்டு நான் இருந்தாத்தான்… ஒண்ணு இன்னொன்னை மறக்க முடியும். அது முட்டாள்தனம்.

ஆத்மா வேதனைப்படலே. அது குறையுணர்ச்சி உடைய பொருள் இல்லே. எப்பவும் அதுக்கு நேர் மாறான உணர்ச்சிதான் நினைப்பு.

அதுக்கு உண்மையிலேயே இருப்பு கிடையாது.

நினைப்புகளைப்
போக்குங்கோ!

நாம் எப்பவுமே ஆத்மாவாவே இருக்கும்போது, ஏன் தியானம் பண்ணணும்?

நாம எப்பவும் ஞானம் அடைஞ்சேதான் இருக்கோம்.

நினைப்பு இல்லாமே இருக்கணும்.
அவ்வளவுதான்.

உங்களோட உடல்நிலை தியானத்துக்கு ஒத்துழைக்க மாட்டேங்கறதுன்னு நீங்க நினைக்கறேள்.

இந்த வேதனை எப்படி வர்றதுன்னு பாக்கணும். நம்மள உடம்போட தப்பா சேத்துக்கறதாலே ஏற்படறது.

நோய் ஆத்மாவுக்கு இல்லை. உடம்புக்குதான். உடம்பு வந்து
சொல்லித்தா, ‘எனக்கு உடம்பு சரியில்லே’ன்னு.

நீங்கதான் சொல்றேள். ஏன்?

உடம்போட தவறா நம்மள
சம்பந்தப்படுத்திக் கொண்டோம்.

உடம்பே நினைப்புதான்.

நீங்க எப்பவும் இருக்கற மாதிரியே இருங்கோ.

கவலைப்படறதுக்கு எந்தக் காரணமும் இல்லே.

சும்மாயிருங்கோ!

கவலையில்லாமே இருங்கோ!

ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி