Rama namam in tamil

கலியுகத்தில் முக்திக்கு வழி – Rama namam special in tamil

நாமசங்கீர்த்தனம் என்பது அனைவரும் அறிந்ததே.
பாட்டு பாடத் தெரியலையே… கவலை வேண்டாம்.
பஜனை பண்ணத் தெரியலையே… வருத்தம் வேண்டாம்.

சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழையில்லாமல் உச்சரிக்க முடியலயே, ஆதங்கம் வேண்டாம்.

பகவானின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு ஸகஸ்ரநாமத்தை தினமும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். சொல்ல முடியவில்லையே என வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள்.

எப்படி பட்ட பொக்கிஷத்தை”பீஷ்மாச்சாரியார் நமக்கு வழங்கியிருக்கிறார். அதை மனதார, பயபக்தியுடன் சொன்னாலே போதும் முக்தி அடைந்து விடலாம்.முழுவதும் சொல்ல முடியா தவர்கள் “இலகு பாராயணமாக”

‘ஶ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே ஸஹ ஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே..”

இதை மட்டும் சொன்னாலே விஷ்ணுஸகஸ்ர நாமத்தை முழுவதும் சொன்ன பலன் என்று, கலியுகத்தில் துரித கதியில் இயங்கும் மக்க ளுக்காக, பகவானே அவனது நாமங்களை மனிதர்கள் சொல்லிக் கேட்கும் ஆசையில்
adjust பண்ணிக் கொண்டாரோ?

அது கூட முடியலயா? இந்த 5 நாமங்கள் மட்டும் போதும். நம்மை உய்விக்க.

பகவான் “தான் எத்தனை எளிமையானவர், “கருணையானவர்.. எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர்அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என ஆவலோடு காத்து கொண்டி ருக்கிராறாம்.

முதல் நாமம்…
************
“”ராமா””

ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோமனதில் அத்தனை தடவை சொல்லுங்கள். மனதில் சஞ்சலங்கள், துக்க ங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள் “ராம” நாம த்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவ து நிச்சயம்.

ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன்
அந்கு வந்து அமர்ந்து விடுகிறானாம்.
“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்”

பத்தாயிரம் ராமநாமாக்கள் சொன்னால் ஏழு கோடி மந்திரங்கள் சொன்ன பலனாம்…

2வது நாமம்….
***************
“”க்ருஷ்ணா””

இந்த நாமமே பாண்டவர்களைக் கூடவே இரு ந்து காத்தது.குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் “க்ருஷ்ணா.எனக்கு கஷ்டங்களைக் கொடு. அப்போதுதான்.உன்னை.மறவாமல் இருப்பே ன்..” என்றாள். கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக் கொடுக்கும் ,நாமம்.

3வது நாமம்
*************
“நாராயணா””

சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.
எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்
அவனைக் காப்பாற்றிய”நாமம்.. பகவானுக்கு
பிடித்த குழந்தை அவன்.

ஆண்டாள் தன்,பாசுரத்தில் “நாராயணனே நமக்கே பறை, தருவான். என்று, “ஏ” காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.

4வது நாமம்
*************
“கோவிந்தா”

துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலு ரித்த போது நிர்கதியாக நின்ற அவளுக்கு கை”கொடுத்த நாமம்….

“தனது இரு கைகளையும் உயரத்” தூக்கி “கோவிந்தா.. கோவிந்தா” என கதறிய போது அவள் மானத்தை காப்பாற்றிய நாமம் அன்று ம் இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக்
கொண்டே இருக்கும் நாமம்.

5வது நாமம்…
**************
“நரஸிம்மா”

பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவனாம்.
“நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.
அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே
தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.

” நீயே கதி” என சரணடைந்த அடியார்களுக்கு
உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்.

“ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்று சொன் னதே இல்லை . அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன். அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத் தில்

“நாரஸிம்ஹ வபுஶ்ரீமான் கேசவ புருஷோத்தம
என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.

இந்த எளிமையான ஐந்து நாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்”கூறுவோம். இந்த நாமங்கள்நம்மை உய்விக்கும் என்பதில் எள்ள ளவும் ஐயமில்லை..

Leave a Comment