Ramar Story Tamil
இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர்.
சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
அப்படி பராக்கிரமசாலியான ஸ்ரீஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார்.
ராமபாணங்கள் எகிறின. ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது, பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’ செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார்.
அதை இராமரே ஒப்புக்கொள்கிறார்.
அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னோர் உபகதையும் உண்டு. இராமாயணத்திலே விபீடணன் புஷ்பக விமானத்தில் அயோத்தி மாநகருக்கு வந்து இராமபட்டாபிஷேகம் கண்டும், எல்லாரையும் கண்டு ஆனந்தித்தும், இலங்கைக்குச் செல்லும் வேளையில்,
விபீடணனின் அயோத்தி நண்பர் ஒருவர், தனக்கு அந்த இலங்கையைச் சுற்றிப் பார்த்திட ஆசையுள்ளது என்று சொன்னதால், புஷ்பகத்தில் அவனையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றார்.
அரசரின் விருந்தினராக பலநாள்கள் இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர், அயோத்திக்குச் செல்ல ஆசைப் பட்டான். உடன் அவன் “நான் எவ்வாறு கடல் கடந்து போக முடியும்?” என்று விபீடணனிடம் வினவ
அதற்கு விபீடணன் “ஒரு மகா மந்திர ஓலையை உன் அரைக்கச்சத்தில் கட்டி விடுகிறேன். அது உன்னை கடலின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்.” என்று சொல்லி மகா மந்திரம் எழுதிய ஓலையை அவனுடைய அரையில் கட்டி விட்டார்.
எக்காரணம் கொண்டும் அந்த ஓலையை வழியில் எடுத்துப்பிரித்துப் படிக்காமல் கரை சேரவும். கரை சேர்ந்ததும் கடலில் அந்த ஓலையை எறிந்து விடவும்” என்றும் சொன்னார். அப்படிப் பிரித்துப் பார்த்தால் வழியிலேயே கடலில் மூழ்கிவிடுவாய்.” என்றும் கூறினார்.
அவன் புறப்படும் சமயம் அந்த மந்திர ஓலையை நன்கு முடிந்து கொண்டான். கடற்கரையை அடைந்தான். ஒவ்வோர் அடியாக கடலில் அடியெடுத்து வைத்தான். அவன் தரையில் நடப்பது போலவே உணர்ந்தான். பின் வேகமாகவும், ஓட்டமாகவும் நடந்து முன்னேறினான்.
பல காத தூரங்கள் கடந்து, இயற்கையையும் கடல் வாழ் ஜந்துக்களையும் ரசித்துக் கொண்டே நடந்து சென்றான்.
‘எப்படிப்பட்ட மகாமந்திரம் இந்த ஓலைச் சுவடியில் உள்ளது! அது என்னை இந்த மகாசமுத்திரத்தையே கடக்க வைத்து விட்டதே! உண்மையிலேயே இது ஒரு மகாமந்திரம்தான். அதன் மகிமை பெரியதுதான்’ என்று வியந்தான்.
தூரத்தில் கரை தெரிய ஆரம்பித்தது. ‘இன்னும் சில காத தூரமே தானிருக்கிறது. நான் மந்திர ஓலையால் மா கடலை கடந்து வந்து விட்டேன்?
அவனுக்குள் ஓர் ஆர்வம். இந்த மகா மந்திரம் என்னவாக இருக்கும். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஏற்பட்ட ஆவல் உந்துதலால் அந்த ஓலையை எடுத்துப் பிரித்து உரக்கவே படித்தான்.
அதில் ராம் ராம் என்று பலமுறை எழுதியிருந்ததைக் கண்டான்.
ஆச்சர்யத்துடன் ‘பூ’ இவ்வளவுதானா? இந்த ராம மந்திரம் தான் எனக்கும் தெரியுமே! இதில் ரகசியம் என்ன?’ என்று நினைப்பதற்குள், அவன் தண்ணீரில் மூழ்கினான்.
அந்த மந்திர ஓலை கையில் இருந்ததால் நீந்திக்கரை சேர்ந்தான் என்பது அதன் சுவாரஸ்யம்.
அதன் சாராம்சம் ‘ராம’ என்ற நாம மகிமைதான் காரணம். அதுதான் தாரக மந்திரமுமாகும்.
ஸ்ரீ ராம ஜெயம் !
ஸ்ரீராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளுவோம் ……
1. பிரம்மாவின் மகன்- மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன்- அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்
66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. **ஸ்ரீ ரகு ராமன்**
இப்படி 68 பரம்பரை கொண்டது.
ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரும் புண்ணியம்….!!
மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More
மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More
தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More
ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More