எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதர்மம் தலை தூக்கினாலும் தர்மமே வெல்லும் என்பதன் எடுத்துக்காட்டு….

531 ஆண்டுகளுக்குப பிறகு செருப்பு மற்றும் தலையில் துண்டு கட்ட போகும் சத்ரிய வம்ச குடும்பங்கள், நம் இந்தியாவில்.

வரும் ஜனவரி 22 அன்று அயோத்தியில் ஶ்ரீ ராமர் பிறந்த, அதே இடத்தில் அவரின் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று வேறொரு முக்கியமான சம்பவம் நடக்க உள்ளது.

அயோத்தியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சூரிய வம்ச சத்திரிய வம்சாவழியினர், 531 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக செருப்பு மற்றும் தலையில் துண்டு கட்ட உள்ளனர்.

இஸ்லாமிய மன்னர் ஆட்சியில், ராமாயணம் புகழ் பெற்ற, ஶ்ரீ ராமர் ஆலயம் அமைந்த ராமஜென்ம பூமி ஆலயம் இடிக்கப்பட்ட போது, அதை காப்பாற்ற வீரமாக போரிட்ட இந்த சூரிய குல சத்திரிய வம்ச வீரர்கள், தங்களது வீரத்தை மீறி அக்கோவில் இடிக்கப்பட்டதால் மிகவும் மனம் வருந்தினர்.

மீண்டும் இதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் வரை, நாங்கள் தலையில் துண்டு கட்ட மாட்டோம், செறுப்பு அணிய மாட்டோம், குடை பயன்படுத்த மாட்டோம் என்று அனைத்து சூரிய வம்ச சத்திரியர்களும் சபதம் செய்தனர்.

தங்கள் முன்னோர்கள் போட்ட சபதத்தை மீறாமல், ஐந்து நூற்றாண்டுகளாக இந்த சூரிய வம்ச சத்திரிய குடும்பங்கள், தங்கள் கல்யாண காலங்களில் கூட செருப்பு, தலைக்கட்டு, குடை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டினர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இப்போது அனைத்து கிராமங்களிலும் சூரியவம்சம் சத்திரியர்களுக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் 22ஆம் தேதி அன்று அணிந்து கொள்வதற்காக புதியதாக தலைக்கட்டு தயாரிக்கப்பட்டு கிராமம் கிராமமாக வழங்கப்படுகிறது.

இவர்களது தியாகமும் கட்டுப்பாடும் வேண்டுதலும் வருகின்ற ஜனவரி 22 அன்று நிறைவேறப் போகிறது….

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதர்மம் தலை தூக்கினாலும் தர்மமே வெல்லும் என்பதன் எடுத்துக்காட்டு….

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்…

 

ராமரின் மந்திரங்கள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா

அயோத்தி ராமர் கோவில் செல்ல வழி

அயோத்தி ராமர் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்