Karpanai Endralum lyrics tamil – கற்பனை என்றாலும் பாடல் வரிகள்
திரு. T.M. சௌந்தரராஜன் அவர்கள் பாடிய முருகர் பக்தி பாடல்களில் இந்த பாடல் நம் மனதை நெகிழ வைக்கும் ஒன்றாக அமைகிறது. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (Karpanai Endralum lyrics in tamil)
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் – நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
– கற்பனை என்றாலும்
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
பாடியவர்: டி.எம்.எஸ்
வேலும் மயிலும் சேவலும் துணை
சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள்
திருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில்
அழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான குறிப்புகள்