Enakkum Idam Undu Song Lyrics
எனக்கும் இடம் உண்டு பாடல் வரிகள் (enakkum idam undu song lyrics) என்பது முருகனைப் பற்றிய தமிழ் பக்திப் பாடல். இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் [டி.எம்.எஸ்] பாடியுள்ளார்.
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
கார்த்திகை விளக்கு பெண்களுடன்-திரு
காவடி சுமக்கும் தொண்டருடன்..
கார்த்திகை விளக்கு பெண்களுடன்-திரு
காவடி சுமக்கும் தொண்டருடன்….
தினம் கூப்பிடும் ஞானமலர்களுடன்-ஒரு
புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்….
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு….
நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள்
நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள்
நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்….
வரும் காற்றில் அணையா சுடர்போலும்-இனி
கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்….
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு….
ஆடும் மயிலே என் மேனி – அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி – அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் எனும் தோகையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால்
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு….
ஓம் முருகா போற்றி… அரோகரா
கந்தனை மனமுருக வணங்கி இந்த பாடலை துதித்து சுப்பிரமணிய கடவுளின் அருளை பெறுவோம்…
ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்
பண்பொழி ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்
ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்