Guruve Saranam Lyrics in Tamil

ஸ்ரீ குரு ராகவேந்திரரின் பாடல் என்றால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த குருவே சரணம் (Guruve Saranam lyrics) பாடல் தான் என்பதில் ஒரு ஐயமும் இல்லை… கேஜே ஜேசுதாஸின் குரல் இசையோடு கலந்த அருமையான பாடல்.. கம்பீர குரலின் சக்ரவர்த்தி மறைந்த மதிப்பிற்குரிய ஐயா மலேசியாவின் குரலும் அற்புதம் இப்பாடலில்…. இந்த பாடலைக்கேட்டால் வாழ்க்கையில் எவ்வளவு சோகம் இருந்திருந்தாலும் அப்படியே பறந்துவிடும்.  அழைக்கிறான் மாதவன் பாடலின் காணொளி இந்த பதிவின் கிழே உள்ளது… இந்த பாடலை நாம் கேட்டுக்கொண்டே மனமுருக ஸ்ரீ குரு ராகவேந்திரரை துதிப்போம்…. ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய போற்றி….

அழைக்கிறான் மாதவன்… ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும், மயில் இறகும்,
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்

தேடினேன் தேவதேவா… தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா… வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்…. வேத கானம் பாடினேன்…..
கால காலம் நானுனை
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே…

காதில் நான் கேட்டது… வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்…
மாயனே நேயனே மாசில்லாத தூயனே….
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்……
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே…

குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா….
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா….
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர
குருவே சரணம்! குருவே சரணம்!

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?

தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!

குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திர ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! –
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர….

அழைக்கிறான் மாதவன் காணொளி 

பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்‌ஷாய நமதாம் காமதேனவே

 ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்தோத்திரம்:

யத்பாத கஞ்ரஜஸா பரிபூஷிதாங்கா:

யத்பாத பத்ம மதுபாயித மானஹாயாயே!

யத்பாத பத்ம பரிகீர்த்தன ஜீர்ணபாசஸ்

தத்தாஸனம் துரித கானன தாவபூதம்:

இந்த பாடல் பற்றிய உங்களின் அனுபவங்களையும் கிழே தெரிவிக்கவும்… இந்த பாடலை நாம் கேட்கும் போது மனதிற்கு மிக ஆழமான அமைதி கிடைக்கும்… இதனை தனியே அமர்ந்து அமைதியான சூழலில் கேளுங்கள்… உங்களுக்கு நடந்த அதிசயங்களை இங்கே பகிருங்கள்… மற்றவர்களுக்கு உங்கள் அனுபவம் ஒரு நம்பிக்கையை தரும்…

108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள்

அனுமான் 108 போற்றி

ஷீரடி சாய்பாபா 108 போற்றி

27 நட்சத்திரங்களின் கடவுள், மரங்கள் மற்றும் பாடல்கள்

Leave a Comment