14/12/2017 சற்று முன் திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து பெண் பக்தர் பலி…

திருச்செந்தூர்: முருகன் கோவிலில்       பிரகார மண்டபம்  இடிந்து  விழுந்ததில்  பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.   2 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து கோவிலின் நடைசாத்தப்பட்டு பரிகார பூஜைகள்  நடத்தப்பட்டது…

இது நடந்து முடிந்த சிறு நிமிடங்களில் கூட்டம் அதிகமாக கூடியது…

இந்த இடிபாடுகளில் பல பக்தர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மண்டபம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது.

இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
தொடர் மழை, ஒகி புயல் காரணமாக இந்த மண்டபம் வலுவிழந்து இருக்கலாம் என தெரிகிறது

சில மணி நேரத்தில் மீட்பு பணிகள் துவங்கியது… அதன் காணொளி கீழே கொடுக்க பட்டுள்ளது…

Leave a Comment