Krishna Nee Begane Lyrics in Tamil
கிருஷ்ணா நீ பேகனே பாரோ – (Krishna Nee Begane Lyrics) பாடல் வரிகள் மற்றும் பாடலின் பொருள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் திருவடிகளே போற்றி…
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
பேகனே பாரோ முகவன்னே தோரோ (கிருஷ்ணா)
காலா லந்திகே கெஜ்ஜே நீலத பாவோலி
நீலவர்ணத நாட்யா வாடுத பாரோ (கிருஷ்ணா)
உடியல்லி ஊடுகெஜ்ஜே பெரளல்லி உங்குர
கொரளோளு ஹாகித வைஜயந்தி மாலே (கிருஷ்ணா)
காசி பீதாம்பர கையல்லி கொளலூ
பூசித ஸ்ரீகந்த மையொள கிரலு (கிருஷ்ணா)
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத்தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)
கிருஷ்ணா நீ பேகனே பாரோ – பாடல் பொருள்
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)
கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)
இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)
பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)
தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)
குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள்