செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை!

Pilli sooniyam yeval removal:
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
இதோ அதன் செய்முறை…!
பொருட்கள் அளவு:
1. வெண்கடுகு – 250 கிராம்
2. நாய்க்கடுகு – 250 கிராம்
3. மருதாணி விதை – 250 கிராம்
4. சாம்பிராணி – 250 கிராம்
5. அருகம்புல் பொடி – 50 கிராம்
6. வில்வ இலை பொடி – 50 கிராம்
7. வேப்ப இலை பொடி – 50 கிராம்
இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.
ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)