Neeyallal Deivam Illai Lyrics Tamil
நீயல்லால் தெய்வமில்லை (Neeyallal deivam illai) பாடல் பாடியவர் டாக்டர் சீர்காழி S கோவிந்தராஜன். இந்த பாடலின் காணொலியும் இந்த பதிவின் கிழே பதிவிடப்பட்டுள்ளது …
நீயல்லால் தெய்வமில்லை பாடல் வரிகள்!!!
ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
“நீதி தழைக்கின்ற” போரூர் தனிமுதலே – நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…
நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை! (3)
தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்!
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்!
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்!
திருவே நீயென்றும் என்
உள்ளம் நிறைந்தாய்!
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்!
வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!
நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!
முருகா சரணம்!!!!
நீயல்லால் தெய்வமில்லை பாடல் காணொளி
ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்
திருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில்
முருகப்பெருமானுக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று தெரியுமா?