Guru Peyarchi Palangal 2019-20 Parigarangal

ஐப்பசி மாதம் 18ம்நாள் பின்னிரவு ,ஆங்கில மாதம் 5/11/2019 அதிகாலை 5.17க்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்

Guru Peyarchi Palangal 2017

மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/mesham

உங்களது ராசிக்கான மதிப்பெண் 81/100.

பரிகாரங்கள்:

அறிவுரை
குருபகவான் அனுகூலநிலையில் சஞ்சரிக்கும்போது பல நன்மைகளை அளித்தருளுவார் என வேதத்தின் அங்கமான ஜோதிடக்கலை எடுத்துக்கூறுகிறது. அவ்விதம் ஏற்படும் அந்த நன்மைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக வரும் ஒருவருட காலத்தில் வருமானம் உயரும். குரு கொடுப்பதை எதிர்காலத்திற்கு என விரயம் செய்து விடாமல்
சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
 • மேஷ ராசியினருக்கு பரிகாரம் என்று எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், கீழ்க்கண்டவற்றை செய்தால், குரு பகவானால் ஏற்படும் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால், அவற்றை நாம் ஏன் இழக்க வேண்டும்.
 • அதற்காகவே கீழ்க்கண்ட பரிகாரங்கள், வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்திற்கு சிறிது நெய் சமர்ப்பித்து வரவும்.
 • உங்கள் வீட்டின் பூஜையறையில், மாலையில் கூடுதலாக ஓர் நெய் அகல்விளக்கு ஏற்றிவரவும். அற்புத பலன் கிட்டும். வியாழக்கிழமைகளில் பகவற்கு உணவளித்தல்
 • மகான்கள், சித்தர்கள் ஆகியோரின் பிருந்தாவன தரிசனம் உடனுக்குடன் பலன் தரும் அற்புத பரிகாரங்களில் ஒன்று.
 • மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், செவ்வாயின் அதிபதி முருகன் என்பதால் திருச்செந்தூர் ஒருமுறை சென்று வர திருப்பங்கள் உண்டாகும்.
 • தினசரி காலை, மாலை இருவேளையிலும் வீட்டில் விளக்கு ஏற்றி, பூஜை செய்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய பலன் இரட்டிப்பாக அமையும் .
 • குல தெய்வ வழிபாடும் சிறப்பை கொடுக்கும்.

 

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/rishabam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 63/100.

பரிகாரங்கள்:

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

அறிவுரை
சனிபகவானின் அஷ்டமஸ்தான சஞ்சாரத்தின் விளைவாகவும், குருபகவானின் சஞ்சார நிலையினாலும் அதிக அலைச்சல், உழைப்பும் சிறு அளவில் ஆரோக்கியக் குறைவும் ஏற்படக்கூடும். கூடிய வரையில் உடல் நலனில் சற்று கவனமாக இருந்தால் போதும்.
பரிகாரம்
தினமும் காலையில் நீராடிய பின்பு தன்வந்திரி ஸ்தோத்திரம் சொல்லிவருவது சிறந்த பரிகாரமாகும்.
மாலையில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருளிய ஸ்ரீ ரக்ஷோ புவன நரசிம்மஸ்தோத்திரம் படிப்பது நல்ல பலனளிக்கும்.
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தரிசனம் சிறந்த பலனளிக்கும்.
ஸ்ரீ திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி தரிசன கைமேல் பலன் தரும்.
 • ரிஷப ராசியின் அதிபதி சுக்ரன் என்பதால் ரங்கநாதரையும்,தாயாரையும் வெள்ளிகிழமை வழிபடவும்.
 • ஆலங்குடி குரு பகவானை ஒரு முறை தரிசனம் செய்யவும்.
 • தினசரி காலை, மாலை இருவேளையிலும் வீட்டில் விளக்கு ஏற்றி, பூஜை செய்ய குரு தோஷம் விலகும்.

மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/mithunam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 67/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
 • ஜென்ம ராசியில் ராகு நீடித்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். இந்த ராகுவிற்கு குரு பகவானின் சுப்பார்வை தற்போது
 • கிடைக்கிறது. இது மிகவும் நல்ல ராசி மாறுதலாகும். குருவின் பார்வை, ராகுவினால் ஏற்படும் தோஷத்தை பெருமளவில்
 • குறைத்துவிடுகிறது. இருப்பினும், ஆரோக்கியத்தில் தொடர்ந்து கவனமாக இருத்தல் நல்லது. சப்தமஸ்தானத்தில் சனி
 • இருப்பதால் பிள்ளை அல்லது பெண் திருமணத்திற்கு வரனை நிர்ணயிக்கும் போது சற்று ஆராய்ந்து பார்த்து வரனை நிச்சயம்
 • செய்வது நல்லது. குரு பகவானின் நிலை சாதகமாக இருப்பது உதவும்.
பரிகாரம்
 • திருநள்ளாறு ஷேத்திர தரிசனம் நன்மையளிக்கும்
  மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சக்திவாய்ந்த தேரழுந்தூர் தரிசனம் ராகுவின் தோஷத்தை அடியோடு போக்கும்.
  தினமும் ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் படித்தல் கைமேல் பலனளிக்கும்
  தினமும் ஒரு ஸர்க்கம் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் பாராயணம் அளவற்ற நன்மைகளை அளிக்கும். காலம் கண்ட பரிகாரம் இது
 • மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால் மதுரை மீனாட்சி, சொக்கரை தினசரி வழிபடவும்.
 • காலபைரவரை தினசரி வழிபடவும்.

 

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/kadagam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 62/100.

பரிகாரங்கள்:

  • அறிவுரை
  திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
  கூடியவரையில் புதியகடன்களைத் தவிர்க்கவும்.
  பிறருடன் நெருங்கிப் பழகுவதை விளக்கவும்.
  உத்யோகஸ்தர்கள் மேலதிகரிகாளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
  5. முன் கோபம், பிடிவாதம் ஆகியவற்றை தவிர்கவும்,
  பரிகாரம்
  திருமலை – திருப்பதி ஸ்ரீ வேங்கடவன் திவ்ய தரிசனம் நல்ல பலனை அளிக்கும்.
  தென்திட்டைக்குடி குருபகவான் தரிசனம் மிகச்சிறந்த பலன் தரும்.
  3. மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன தரிசனம் சிறந்த கவசமாகும்.
  4. திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேசுவரி தரிசனம்
  வியாழக்கிழமைகளில், மாலையில் வீட்டின் பூஜையறையில் மண் அகலில் நெய் தீபம் ஏற்றி வருதல்,

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/simmam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 92/100

பரிகாரங்கள்:

அறிவுரை
அதிக உழைப்பையும், கற்பனையான கவலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்,
வரவிற்கேற்ற செலவுகளும் இருப்பதால், சற்று சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்,
மாணவ – மாணவியர் தகாத நட்பை தவிர்க்கவும்,
பல பெண்மணிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க சிறந்த வாய்ப்பிருப்பதால், உடல் நலனில் கவனம் இருக்கட்டும்.
பரிகாரம்
 • மாணவ, மாணவியர் தினமும் அவதார புருஷரான ஸ்ரீமத் நிகாமந்த மகா தேசிகர் சக்தி வாய்ந்த ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லி வர வேண்டும்.
 • இந்த ராசியில் பிறந்துள்ள புருஷர்கள் தினமும் ஆதித்ய ஹிருதயம் படித்து வருதல் அளவற்ற நன்மைகளைத் தரும்.
 • பெண்மணிகள், காலையில் நீராடிய பின்பு, ஒரு ஸர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தரகாண்டம், மாலையில் ஸ்ரீ அனுமான் சாலிசாவும் படித்து வந்தால் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.
 • பெண்மணிகள் ஸ்ரீ அபிராமி அந்தாதி, மற்றும் ஸ்ரீ லஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி வருவது மிகச்சிறந்த பரிகாரங்களாகும்
 • பலன் இரட்டிப்பாக வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
 • திருசெந்தூர் முருகனையும் , தக்ஷிண மூர்த்தியும் வழிபட புகழ் பெருகும்.

 

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/kannirasi

உங்களது ராசிக்கான மதிப்பெண் 74/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
  செலவுகளில் சிக்கனமாக இருத்தல் உங்கள் எதிர்கால நன்மைக்கு மிகவும் உகந்தது.
  2. சனி பகவான் தொடர்ந்து அர்த்தாஷ்டகத்தில் இருப்பதால் அவசியமில்லாத உடல் உழைப்பை குறைத்து கொள்வது நல்லது.
  பழைய கடன்களை அடைப்பதற்கு, இது ஓர் அனுகூலமான சந்தர்ப்பம். பிறகு “பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒத்திப்போடாமல் காற்றுள்ள போதே கடனை அடைத்து, நிம்மதி பெற வேண்டும்.
  பரிகாரம்
  கர்நாடகாவில் உள்ள நாகமங்களா எனும் அற்புத திருத்தல தரிசனம் ஏற்ற பரிகாரம் ஆகும்,
  பொங்கு சனி க்ஷேத்திரமான திருக்கொள்ளிக்காடு சென்று, 24 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைத்து தரிசிப்பது நல்ல பலனை அளிக்கும்.
  மதுரை ஸ்ரீ மீனாட்சி , ஸ்ரீ சுந்தரேஸ்வரர், மற்றும் சித்த புருஷரின் ஜீவ சமாதி சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றிவைத்து தரிசிப்பது கைமேல் பலனளிக்கும்.
  ஏகாதசி உபவாசம், தன்னிகரற்ற பரிகாரமாகும்.
 • திட்டையில் உள்ள குரு பகவானை தரிசிக்க வேண்டும்.
 • காஞ்சி வரதராஜ பெருமானை தரிசித்து தொழிலில் முன்னேற்றம் கண்டு எல்லா விதத்திலும் வெற்றி அடைவீர்கள்.
 • வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/thulam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 60/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
  தேவையற்ற செலவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  வருமானத்திற்குள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்.
  உத்தியோகத்துறையினர் அலுவலகத்தில் தானுண்டு, தன் பணியுண்டு என்று பிறர் விஷயங்களில் தலையிடாமல் விலகி நிற்கவேண்டும்.
  பரிகாரம்
  திருக்குடந்தை (கும்பகோணம்) காவிரிக்கரையில் திகழும் ஸ்ரீவிஜயேந்திர தீர்த்தர் பிருந்தாவன தரிசனம், திரிதீய குருவினால்
  ஏற்படும் தோஷத்தை அடியோடு போக்கும்.
  வியாழக்கிழமைகளில் பகல் உணவு ஒருவேளை மட்டும் உணவருந்தி, இரவில் உபவாசம் இருத்தல். இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். ஒருவருடம் அனுஷ்டித்தால் போதும்.
  தினமும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வருதல் நல்ல பலனை அளிக்கும்.
  உங்கள் குல குரு அல்லது ஆச்சார்யன் தரிசனம்
 • திருசெந்தூர் சென்று முருகப்பெருமானையும் , தக்ஷ்ணாமூர்த்தியையும் வழிபட மிகப்பெரிய மாற்றங்களையும், சந்தோஷத்தையும் தரும்.
 • ஸ்ரீரங்கம் சென்று சைன கோலத்தில் இருக்கும் பெருமானையோ அல்லது குருவாயூர் சென்று குருவாயூரப்பனையோ வழிபட சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள் .

விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/viruchigam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 92/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
  வரும் ஒருவருட காலத்தில் வருமானம் உயரும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை
  பயன்படுத்திக் கொண்டு சிக்கனமாக இருந்து உங்கள் நிதிநிலைமையை சரிசெய்து கொள்ளுங்கள். இன்றைய சிக்கனம்தான்
  நாளைய நல்வாழ்க்கைக்கு மிக, மிக அவசியமாகும். –
  வாக்குஸ்தானத்தில் சனிபகவான் நீடித்திருப்பதால் பேச்சில் நிதானம் வேண்டும். முன் கோபத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  உங்களுக்கு சம்பந்தமில்லாத, பிறர் விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.
  பரிகாரம்
  அனுகூலமான நிலையில் இப்போது குருபகவான் மாறியிருப்பதால், பரிகாரம் என்று எதுவும் அவசியமில்லை. இருப்பினும் ஏழரை சனி காலம் நீடிப்பதால், 24 சனிக்கிழமைகள், உங்கள் வீட்டின் பூஜையறையில் மாலையில் மண் அகல் ஒன்றில்
  நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது சிறந்த பரிகாரம் ஆகும்.
  தினமும் காலையில் நீராடிய பின்பு 1008 தடவைகள் ராமநாமம் ஜபிப்பது தன்னிகரற்ற பரிகாரம் ஆகும்.
  சென்னிமலை முருகப் பெருமானின் தரிசனம் உடனுக்குடன் பலனளிக்கும்.
 • திருசெந்தூர் சென்று முருகப்பெருமானையும் , திருப்பதி சென்று ஏழுமலையானையும் வழிபட உங்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/thanusu

உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

பரிகாரங்கள்:

  • அறிவுரை

  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

  பின்னிரவு நேரங்களில் வாகனம் ஓட்டுதல் தவிர்ப்பது அவசியம்,
  கூடியவரையில் சிக்கனமாக செலவு செய்வது நன்மையளிக்கும்.
  4. பிறர் பிரச்னைகளில் தலையிடவேண்டாம்.
  அரசியல் பிரமுகர்கள் தவறான வழிகளில் செல்ல வேண்டாம். ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
  பரிகாரம்
  காலையில் நீராடிய பின்பு தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் படித்து வரவும்.
  மாலையில் சனீஸ்வரபகவானின் ஸ்ரீ ரக்ஷோபுவன ஸ்தோத்திரம் படித்தல்
  மேல்வெண்பாக்கம் ஸ்ரீ நரசிம்ம நாராயணர் தரிசனம் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்
  24 வியாழக்கிழமைகளில் மாலையில் நெய்தீபமும், 24 சனிக்கிழமைகள் நல்லெண்ணெய் தீபமும் உங்கள் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றிலோ ஏற்றி வருவது கைமேல் பலனளிக்கும்.
  தினமும் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் பாராயணம் செய்தல். இதன் பலன் அளவற்றது.
 • ஆலங்குடி சென்று குருவை தரிசிக்க வாழ்வில் பெரிய மாற்றங்கள் நிகழும்.
 • திருப்பட்டூர் சென்று ப்ரம்மாவை வழிபட பரிபூரண நன்மை கிட்டும்.

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/magaram

உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
  வீண் செலவுகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்,
  புதிய கடன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,
  பொருட்கள் களவுபோக வாய்ப்புகள் உருவாகும். ஆடை ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
  பரிகாரம்
  சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், ஆனைமலை ஸ்ரீ மாசாணியம்மன், புண்ணியநல்லூர் அம்பிகை, சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள
  பரமேஸ்வரி, மேட்டுப்பாளையம் வன துர்க்கை தரிசனம் உடனுக்குடன் கைகொடுக்கும். ஒவ்வொரு சன்னதியிலும் நெய்தீபம்
  ஏற்றி வைக்க மறந்து விடாதீர்கள்.
  வியாழக்கிழமைதோறும் உங்கள் வீட்டின் பூஜையறையில், மாலையில் 9 நெய் தீபங்கள், மண் அகலில் ஏற்றி வரவும். அதே அகல்களையே மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தலாம். இதன் சூட்சும சக்தி அளவிடர்கரியது. 6 மாதங்கள் செய்து வந்தால் போதும்.
  வியாழக்கிழமைகளில் பகல் உணவு மட்டும் அருந்தி, இரவில் உபவாசம் இருத்தல். அவசியமானால், பால், பழம் மட்டும்
  சாப்பிடலாம்.
 • திருபுவனம் ( கும்பகோணதில் உள்ள ) சரபரை ஞாயிற்று கிழமையில் ராகு வேளையில் ( 30 -6 pm  ) 11 விளக்கேற்றி 11 முறை வலம் வர எப்பேற்பட்ட பிரச்சனைகளும் விலகி  உங்களுக்கு நிம்மதியளிக்கும்.
 • வியாழக்கிழமையில் தக்ஷ்ணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும்.

கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/kumbam

உங்களது ராசிக்கான மதிப்பெண் 68/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
  சதா சஞ்சரிக்கும் கிரகங்கள் ஏதோ ஓர் காலகட்டத்தில்தான்
  சுப பலன்களை அளிக்கும் வகையில் நிலை கொள்கின்றன.
  அத்தகைய தருணங்களில் கிரகங்கள் கொடுப்பதை நாம்
  காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  நவக்கிரகங்கள் பரம கருணையுடன் கொடுப்பதை நாம் விரயம்
  செய்துவிடக்கூடாது. மேலும், தினமும் நவக்கிரகங்களை நன்றியுடன்
  பூஜித்து வர வேண்டும்.
  பரிகாரம்
  கும்பராசியினருக்கு பரிகாரம் என்று எதுவும் செய்யவேண்டிய
  அவசியம், ஜோதிடக் கலையின் விதிகளின்படி, தற்போது
  அவசியமில்லை இருப்பினும், சில பரிகாரங்கள் செய்தால்,
  நவகிரகங்களினால் ஏற்படும் நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும்
  என “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது.
  திருவரங்கம், திருவெள்ளறை, உப்பிலியப்பன் கோவில், குணசீலம்
  தரிசனம் நன்மைகளை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும்.
  கங்கா ஸ்நானம் சிறந்த பலனளிக்கும்.
  மகான்களின் பிருந்தாவன தரிசனம் ஈடு, இணையற்ற பரிகாரம் ஆகும்.
 • திட்டையிலுள்ள குருபகவானை சென்று வழிபட நல்ல பலன் கிடைக்கும்.
 • ஸ்ரீ முஷ்ணம் சென்று லட்சுமி வராஹ பெருமானை வழிபட பெரிய மற்றம் நிகழும்.

மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020

http://bit.ly/meenamrasi

உங்களது ராசிக்கான மதிப்பெண் 85/100.

பரிகாரங்கள்:

 • அறிவுரை
  1. கை பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்யவும்.
  சில தருணங்களில் உணர்ச்சி வசப்படும் சூழ்நிலை உருவாகலாம். அத்தகைய தருணங்களில் பொறுமையும், நிதானமும் அவசியம்
 • உத்யோகத்துறையினர் அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
  பலருக்கு சொந்தவீடு அமையும். வாங்குவதற்கு முன் ஆவணங்களை தகுந்த நிபுணர்களை கொண்டு சரிபார்க்கவும்.
  பரிகாரம்
  வசதியுள்ள அன்பர்கள் ரிஷிகேசம் சென்று, அவதார புருஷர் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனம்
  தரிசித்தல் கைமேல் பலனளிக்கும்
  திருவண்ணாமலை க்ஷேத்திர தரிசனம் நல்ல பலன் தரும்.
  காஞ்சி காமகோடி பீடம் மகாபெரியவா, மற்றும் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின்
  பிருந்தாவனங்கள் தரிசனம்.
 • வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
 • திருச்செந்தூர் முருகனை தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
 • ஆலங்குடி அல்லது திட்டை சென்று குருவை வழிபட வெற்றி கைகூடும்.

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

1 Comment

Leave a Comment