Simmam sani peyarchi palangal 2020-23
🦁சிம்மராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 (Simmam sani peyarchi palangal 2020-23)
பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பானவர்கள்.. ஏனென்றால் சூரியன் ஒரு துரித கிரகம்.. வேகமான கிரகம்.. உங்கள் ராசிநாதனின் குணங்கள் உங்களுக்கும் இருக்கும் என்பதால் நீங்களும் சுறுசுறுப்பானவர்களே.. ஸ்ட்ரெய்ட் பார்வர்டு .. நேர் வழியில் செல்பவர்கள்.. கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காத சிம்ம ராசிக்காரர்கள், கொஞ்சம் முன்கோபம் உடையவர்கள்.. “சிம்மத்தோன் சீறியே சினந்து நிற்பான்” என்பது பழமொழி.
உங்கள் பேச்சு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று இருக்கும்.. பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் அடிமைத்தொழில் செய்யமாட்டார்கள்… அடிமைத்தொழில் இவர்களுக்கு ஒத்துவராது.. ஏனென்றால் சூரியனை ராசியாக கொண்டவர்கள் என்பதால் அடுத்தவர்களுக்கு வேலை சொல்லியே, அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவர்கள் என்பதால் இவர்களை அடுத்தவர்கள் அதிகாரம் செய்ய முடியாது….
இவர்கள் எப்போதும் சொந்தக்காலில் நிற்பார்கள் ..இவர்களுக்கு பந்தக்கால், இரவல் கால் தேவைப்படாது. உங்கள் ராசியின் சின்னம் சிங்கம்… எனவே சிங்கத்தின் கம்பீரம் உங்களுக்கு இருந்தே தீரும்.. கௌரவம் குறையும் படியான எந்தவிதமான, புகழுக்கு இழுக்கு தரக்கூடிய எந்தவிதமான காரியத்தையும் செய்யமாட்டீர்கள்..
இவர்களிடம் பணம் வேண்டுமா ?புகழ் வேண்டுமா? என்று இவர்களிடம் கேட்டால் புகழ் வேண்டும் என்று சொல்வார்கள் இவர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால், புகழ்ச்சிக்கும் மயங்கி விடுவார்கள்..
🌟நட்சத்திரபலன்கள்
சனிப்பெயர்ச்சி 2020 – 2023 நிகழும் போது சிம்ம ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டு காலத்தில் எப்படிப் பட்ட பலன்களைப் பெற உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்… இங்கு சிம்ம ராசியில் இருக்கும் மகம், பூரம், ஆயில்யம் நட்சத்திரத்திற்கான பலனும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிம்ம ராசி
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதனால் சிம்ம ராசிக்கு (மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்) எப்பேர்ப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.சனி பெயர்ச்சியால் 6ஆம் இடமான மகரத்திற்கு வரும் சனி பகவான், 5ல் குரு ஆகியோரால் மிக நல்ல பலன்களைச் சிம்ம ராசி பெற உள்ளார்கள்.
சிம்ம ராசி பொதுபலன்கள்
🦁கம்பீரமான குணம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். எதையும் தாங்கிக் கொள்ளும், சமாளிக்கும் திறமை மிக்கவர்கள். எந்த கூட்டத்தலும் தனியாக தெரியக் கூடிய தோறனையானவர்கள்
🦁ஒரு செயலை செய்ய தொடங்கி விட்டால் அதில் என்ன பிரச்னை என்றாலும் அதை செய்து முடிக்கக் கூடிய போர் குணம் மிக்கவர்கள்.அதனால் வாழ்வில் பல சாதனையைப் படைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
யோக பலன்களை பெற உள்ள சிம்மம்
🦁குரு ஏற்கனவே 5ல் அம்சமாக இருக்கும் நிலையில், சனி 6ம் இடமான மகரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் ராசிக்கு யோகங்கள் தான் இருக்கும் கவலை தேவையில்லை. உங்களின் தசா புத்தி சிறப்பாக அமைந்தால் எல்லாவற்றிலும் நன்மை தான் உருவாகும்.
2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
🦁சனி 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்ததால் அதற்கான பலன்களில் சிக்கலை தந்து வந்தார். தற்போது 6ம் இடமான கர்ம தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். சனி கொடுக்கும் பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகளை பொருத்தும் அமைவதால் மூன்று ஆண்டுகளுக்கான பலன்களாக பிரித்துக் கொள்வது நல்லது.
2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
குருவும் கேதுவும் 5ல் இருப்பதோடு 11ல் ராகு அமைந்து 2020 நன்மையை பெறச் செய்யக் கூடியதாக இருக்கும்.
🦁ஆனால் 2021ல் குரு மற்றும் ராகு -கேது பெயர்ச்சி காரணமாக உங்களின் வேலை சார்ந்த விஷயங்கள் செயலில் தாமதமாகும். குரு நீச்சமாக இருப்பதால் சரியான ஆலோசனை கிடைக்காமல் போகலாம். தேவையில்லாத விஷயத்தில் சிக்கலாம். அதனால் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது.
2022ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
🦁2022ல் சனி பாதக நிலையில் இருந்தாலும் குரு உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் நல்ல பலன்களைப் பெற முடியும். இதுவரை இருந்த குடும்ப சிக்கல், தொழில் சிக்கல்கள் நீங்கி ஒரு சுமூகமான நிலை இருக்கும்.
அதனால் 2020,2021,2022 ஆகிய ஆண்டுகள் ஏற்ற இறக்கம் மிகதாக இருக்கும்.
👍யோக பலன்கள் எப்படி?
திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடப்பதோடு, நல்ல வேலை, தொழில் அமையும். எதிலும் முயற்சியை தளர விடாமல் இருப்பது நல்லது.
மாணவர்களின் கல்வி சிறப்பாக அமைவதோடு, போட்டித் தேர்வில் வெற்றியை தரும் விதமாக இருக்க்கும்.
வாரி வழங்கும் சனி:
சனி பகவான் 6ல் சஞ்சரித்திருப்பதால் அவருக்கு மறைவு ஸ்தானமாக அமைவதால், எந்த ஒரு ராசிக்கும் மறைவு ஸ்தானத்தில் சனி நல்ல பலன்களைத் தான் தருவார் என்பதால் உங்கள் ராசிக்கு பெரிய நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் ஏற்படாது நம் முயற்சியில் அனைத்தும் சிறப்பாக நடக்கும்..
பூரம் நட்சத்திரத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்
🦁எதிர் பார்த்த தொழில் உத்தியோக முன்னேற்றம் இருக்கும். பயணங்களில் கவனம் தேவை. மன அழுத்தமும் நிம்மதியும் இல்லாத நிலை இருக்கும். அதனால் தியானம், யோகா செய்வது நல்லது. பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
🦁உத்தியோகஸ்தர்களுக்கு
வேலை இடங்களில் சற்று மன அழுத்தம் ஏற்படக் கூடும். இருப்பினும் அதிலிருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். ஆனால் இனம்புரியாத பயம் இருக்கும்.
🦁ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்
👍ஆயில்யம் நட்சத்திரத்தினர் எந்த காரியத்தையும் திட்டமிட்டௌ செய்வது நல்ல வெற்றீயை தரும். பயணங்கள் பெரிய அளவில் வெற்றி தராது. வீண் வாக்குவதங்கள் கூடவே கூடாது. உங்கள் சுற்றுப் புறத்தில் நல்ல நட்பும், உறவும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். கணவன் – மனைவி பிரச்னை நீங்கும். விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023